தலைப்பைப் பார்த்ததும் ஏதோ விளம்பர வாசகம் போல தோன்றுகிறதா? இது ஜோதிடம் சார்!
“சந்திராஷ்டமம் அன்னைக்கு என்ன செய்யணும் தெரியுமா?
ரெண்டு பரிகாரம். ஒன்னு, உங்க மொபைல்ல ஒரு செல்பி எடுத்துட்டு உடனே டெலிட் பண்ணிட்டா சந்திராஷ்டமம் ஒன்னும் செய்யாது!
அதே மாதிரி இன்னொரு ஃபேமஸ் பரிகாரம் என்னன்னா...
குட் டே பிஸ்கட் காலைல எழுந்ததும் பல்லு விளக் கிட்டு, ஃபர்ஸ்ட் சாப்பிட்டுடணும்... காரணம் என்னன்னா அது பேரு என்ன இருக்கு? குட் டே! சந்திராஷ்டமம் அன்னைக்கு வரக்கூடிய இன்னல்கள் எல்லாம் மாறி, அந்த டே ஃபுல்லா குட் டே ஆயிடும்!
வராத பணம் திரும்ப வரணுமா? கரணநாதனை ஆக்டிவேட் பண்ண எளிய வழி! யூனிபார்ம் பர்சன்ஸ் இருக்கக்கூடிய இடம் என்னன்னா... போலீஸ் ஸ்டேசன், ஃபயர் ஸ்டேசன். அதுக்குப் பக்கத்தில இருக்கிற டீக்கடையில் போய் பாய்லர் டீ சாப்பிட்டுட்டு, பருப்பு வடை சாப்பிட்டா போதும்... வராத பணம் வந்துடும்! இன்னொருத்தரை பெரிய மால்-ல இருக்கிற தியேட்டர்ல போய் படம் பார்த்துட்டு, பாப்கார்ன், அய்ஸ்கிரீம் வாங்கி சாப்பிடச் சொன்னேன். அவரும் நிறைய பேருக்கு வாங்கிக் கொடுத்து சாப்பிட்டார்.. கவர்மெண்ட்ல அவருடைய டெண்டருக்கு ரொம்ப நாள் வராம இருந்த காசு வந்துடுச்சு!”
இதையெல்லாம் கேட்டா ஏதோ ஜோசியத்தைக் கிண்டல் செய்ய எழுதப்பட்ட காமெடி டிராக் போல தெரிகிறதா? நிச்சயமாக இல்லை... இவை பரிகார ஜோதிடர் மயிலாடுதுறை ஜெ.ரத்தினகுமார் என்பவர் அய்.பி.சி. பக்தி என்ற வலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உள்ள செய்திகள்.
ஜோதிடப் புளுகுகளிலேயே இது கொஞ்சம் ஸ்பெசல் புளுகாக இருக்கிறது அல்லவா? ‘அரச மரத்தைச் சுற்றிவா... அந்தக் கோயிலில் பரிகாரம் செய், அரைப்படி நெய் ஊற்று’ என்றெல்லாம் சொல்வது பழைய ஸ்டைல்! புதுசா ஏதாவது செய்யணுமே! தொழில்னு வந்துட்டா இன்னொவேசன் முக்கியம் பாஸ்! அதான் இந்த குட் டே, பாப்கார்ன், செல்ஃபி எல்லாம்!
இதுக்கே இப்படின்னா... இன்னும் எவ்வளவு ஸ்பெசல் அயிட்டம் இருக்கு!
“குழந்தைகள் பரீட்சை இருக்கு... நீட் எழுதறாங்க,,, பாஸ் பண்ணனுமா? "Pass Pass" (பாக்கு பாக்கெட்) விக்கிதுல்ல... அதை வாங்கி குழந்தைங்க பரிட்சை சமயத்தில தலையணைக்கடியில வச்சுட்டீங்கன்னா போதும்... Law of Attraction விதிப்படி குழந்தையோட மூளையில பாஸ் பாஸ்-ன்னு add ஆகிட்டே இருக்குமா? குழந்தைகள் பாஸ் ஆகிடுவாங்க!”
எதெ?
இது தெரியாமத் தான் லட்ச லட்சமா பணம் கட்டி ஒவ்வொரு வருசத்தையும் வீணடிச்சுக் கிட்டிருக்காங்களா?
இன்னும் சக்ரா கோல்ட் டீ முதல், பேரிவேர் டாய்லட் சீட் வரை ஒவ்வொரு ப்ராடக்டுக்கும் ஒவ்வொரு பலன் கண்டுபிடித்து வைத்திருக்கிறாராம் அன்னார்!
இதுக்கு லாஜிக் ஒன்று சொன்னார் பாருங்க... “கோவில்ல யந்திரம் பிரதிஷ்டை பண்றீங்க... அந்த யந்திரம் எல்லாருக்குமா தெரியுது? அதோட வைப்ரேசன் வொர்க் ஆகிறதில்லையா... அது மாதிரித்தான்!”
ஏமாத்துறதுன்னு வந்ததுக்கப்புறம் யந்திரம் என்ன... தர்ப்பைப் புல் என்ன... பாஸ் பாஸ் பாக்கு என்ன? எல்லாம் ஒன்னு தான்! போட்டுத் தாக்குங்க பரிகார ஜோதிடர் சார்!
- குப்பைக் கோழியார்
No comments:
Post a Comment