சென்னை, ஜூன் 23 - சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவர வியல் பூங்கா, துபையில் உள்ள மிராகில் பூங்கா போன்று உல கத் தரத்துக்கு மேம்படுத்தவுள்ளதாக சென்னை உயர்நீதிமன் றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா மேம் பாலத்தை ஒட்டியுள்ள கதீட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்த மான நிலத்தில் அதிமுக பிரமுக ரான தோட்டக்கலை வி.கிருஷ் ணமூர்த்தி என்பவர், ‘தோட்டக் கலைச் சங்கம்’ என்ற ஒரு தனியார் அமைப்பை உருவாக்கி அந்த நிலத்தை பயன்படுத்தி வந்தார். இந்த நிலத்தை மீட்க 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக் கையை எதிர்த்து கிருஷ்ண மூர்த்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என தீர்ப்பளித்தது.
இந்தநிலையில், அங்கு குத் தகை அடிப்படையில் செயல் பட்ட தனியார் ‘டிரைவ்-இன்’ உணவு விடுதி வசம் இருந்த 20 ஏக்கர் நிலத்தை மீட்ட தமிழ்நாடு அரசு, அந்த இடத்தில் செம் மொழிப் பூங்காவை உருவாக் கியது. ஆனால் அதன்பிறகு செம் மொழிப் பூங்காவுக்கு எதிரே உள்ள சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான 114 கிரவுண்ட் நிலத்துக்கு சொந்தம் கொண் டாடி கிருஷ்ணமூர்த்தி கடந்த 2011-ஆம் ஆண்டு தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற தனி நீதிபதி, வழக்கை கடந்தாண்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். உயர்நீதி மன்ற உத்தரவை உச்ச நீதிமன்ற மும் உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசின் வருவாய்த் துறை அந்த இடத்தை கையகப்படுத்தி தமிழ்நாடு அரசின் தோட்டக் கலைத்துறை வசம் ஒப்படைத்து விட்டது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ் ணமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்துள்ளார்.
மனு விசாரணைக்கு உகந்ததல்ல...
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன் புதன்கிழமை இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜி ராஜகோபால், ‘விதிகளை மீறி கையகப்படுத்தியுள்ளனர். சங்கத்தின் பெயரில் நடத்தப் பட்டுள்ளது தானே தவிர மனு தாரர் ஆக்கிரமிப்பாளர் கிடை யாது. அதிகார அத்துமீறல் செய்து இடத்தை கையகப்படுத் தியுள்ளனர். எனவே, இடத்தை கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், ‘இந்த மனு விசார ணைக்கு உகந்ததல்ல. ஏற்கெ னவே சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உறுதி செய்ததன் அடிப்படையில் இடம் கையகப்படுத்தப்பட்டுள் ளது. நில நிர்வாக ஆணையருக்கு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.
மேலும், மனுதாரர் அந்த இடத்தை தவறாக பயன்படுத்தி யுள்ளார். அந்த இடத்தில் விளம் பரப் பலகைகள் வைத்து வாடகை வசூலித்து தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தியுள்ள னர்.
சட்டப்படியே கையகம்:
அவர்களுக்குத்தான் உரிமை உள்ளது என்பதற்கு எந்த ஆதா ரமும் இல்லை. சட்டத்துக்குள் பட்டு கையகப்படுத்தப்பட்டுள் ளது. இடத்தை தவறாக பயன் படுத்துவதை தடுப்பதற்காகவே அரசு இந்த இடத்தை கையகப் படுத்தி உள்ளது. மீட்கப்பட்ட நிலத்துடன் சேர்த்து செம் மொழிப் பூங்காவை லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா போலவும், துபையில் உள்ள மிராகில் பூங்கா போல வும் உலகத்தரத்துக்கு அரசு மேம்படுத்தவுள்ளது’ என்று வாதிட்டார்.
இந்த வழக்கின் இடையீட்டு மனுதாரரான புவனேஷ்குமார் தரப்பில் மூத்த வழக்குரைஞர் வில்சன் ஆஜராகி, ‘இந்த இடம் அரசுக்கு சொந்தமானது. அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்துதான் இந்த இடத்தை கையகப்படுத்தி உள்ளது. இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. பொதுமக்களின் நலனுக்காகவே இந்த இடத்தை அரசு கையகப் படுத்தியுள்ளது. இந்த இடம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது’ என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை தேதி குறிப் பிடாமல் தீர்ப்புக்காக ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment