‘‘பலே பலே காஞ்சி மாவட்டம்!'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 1, 2023

‘‘பலே பலே காஞ்சி மாவட்டம்!''

வைக்கம் போராட்ட நூற்றாண்டு,  கலைஞர் நூற்றாண்டு 100 கூட்டங்கள்! 

காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

காஞ்சிபுரம், ஜூன் 1- காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந் துரையாடல் கூட்டம் 28.5.2023  

ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி அளவில், காஞ்சிபுரம், 78 ஆலடி வீதி, மாநகரத் தலைவர் வேலாயுதம் இல்லத்தில் நடை பெற்றது.

மாவட்ட இணைச் செயலாளர் ஆ. மோகன் கடவுள் மறுப்பு கூறி னார். மாவட்டச் செயலாளர் 

கி. இளையவேள்  வரவேற்று உரை யாற்றினார்.

 கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி தலைமை வகித்து உரை யாற்றினார்.  மாவட்டச் செயலாளர் கி. இளையவேள்,  மாவட்ட இணைச் செயலாளர் ஆ மோகன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. அருண்குமார், மாநகர கழகத் தலைவர் ச. வேலா யுதம், செயலாளர் இ. ரவிந்திரன், மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் வீ. கோவிந்தராஜி, வாலாஜாபாத் செல்வம் ஆகியோர் உரையாற்றினர். 

தலைமைக் கழக அமைப்பாளர் முனைவர் காஞ்சி பா.‌ கதிரவன் ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானங் களைச் செயல்படுத்த அதிக அள வில் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் அதன்மூலம் உறுப்பினர் சேர்ப்பு, ‘விடுதலை' சந்தா சேர்ப்புப் பணிகளைச் செய்யமுடியும் என்றும் தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை என்பது மனித நேயத்தை மலர  வைப்பதற்கான கொள்கை  என்பதையும் அதற்காகத் தமிழர் தலைவர் ஆசிரியர் மேற் கொண்டு வரும் செயல்பாடுகளையும் தெளிவாக விளக்கி  உரையாற் றினார். 

ஈரோட்டில் நடைபெற்ற திரா விடர் கழகப் பொதுக்குழுவின் தீர் மானங்கள் அனைத்தையும் செயல் படுத்துவதென்றும், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா,  கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி மாவட்டம் முழுவதும் 100 தெருமுனைக் கூட்டங்கள் நடத் துவதென்றும் உறுப்பினர் சேர்ப்பு, விடுதலை சந்தா சேர்ப்பு, தொழி லாளர் அணிக்கு உறுப்பினர் சேர்ப்பு முதலியவை குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய பொறுப்பாளர்கள்: 

காஞ்சிபுரம் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் மு. குறளரசன்,  வாலாஜாபாத் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் எஸ். செல்வம்,  உத்திரமேரூர் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் களியப் பேட்டை கெ. தமிழ்மணி,  துணை அமைப்பாளர் ஒழுகரை பிரகாஷ்,  மாவட்ட மாணவரணி அமைப் பாளர் இரா.மு. திராவிடச்செழியன் ஆகியோர்  புதிய பொறுப்பாளர் களாக நியமிக்கப்பட்டனர். 

ஈரோடு பொதுக்குழுக் கூட் டத்தில்  புதிய பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்ட தலைமை கழக அமைப்பாளர் முனைவர் காஞ்சி பா கதிரவன்,  மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. அருண் குமார் ஆகியோர்க்கு, மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பாகச் செயலாற்ற வாழ்த்து கூறப்பட்டது. 

மாநகரச் செயலாளர் இ. ரவீந் திரன் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் நிறைவுற்றது.

No comments:

Post a Comment