புதுடில்லி, ஜூன் 3- கடந்த 2022-2023 நிதியாண் டுக்கான ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக் குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதமாக இருக்கும் என, அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த நிதியாண்டில், ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதமாக இருக்கும் என, நிதியமைச்சகத்தின் திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப் பீட்டில் கணிக்கப் பட்டு உள்ளதாக, ஒன்றிய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுக்கான, ஒன்றிய அரசின் வருவாய் மற்றும் செலவு குறித்த தரவுகளை வெளியிட்டுள்ள தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம், நிதிப் பற்றாக்குறை 17.33 லட்சம் கோடி ரூபாயாக கணக் கிடப்பட்டு உள்ளதாகவும், இது தற்காலிக மதிப்பீடே என்றும் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் தன் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க, சந்தையில் இருந்து கடன் வாங்குகிறது. நாட்டின் வருவாய் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீதமாகவும், பயனுள்ள வருவாய் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற் பத்தியில் 2.8 சதவீதமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி, மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் 2023-2024ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு, மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 5.9 சதவீதமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment