ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 10, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

10.6.2023

டெக்கான் கிரானிக்கல் அய்தராபாத்:

* பாஜகவை தோற்கடிக்க ஹிந்துத்வா கொள்கையை காங்கிரஸ் கையாண்டு வெற்றி பெற முடியாது. கருநாடக மாநிலத்தில் ஹிந்துத்வா கொள்கைக்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல ம.பி.யிலும் வெற்றி பெற முடியும் என்கிறது தலையங்க செய்தி.

* பாடப் புத்தகத்தில் வரலாற்றை  நீக்கும் என்.சி.இ. ஆர்.டி. அமைப்பின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைப்பின் ஆலோசகர்கள் யோகேந்திர யாதவ், சுகாஷ் பல்சிகார் விலக முடிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஒன்றிய அரசு பதவி உயர்வு கேட்டு டில்லி நார்த் பிளாக்கிற்கு வெளியே அதிகாரிகள் போராட்டம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ரயில்வே பாதுகாப்புக்கு அரசாங்கம் கொடுத்த குறைந்த முன்னுரிமையே பாலசோர் ரயில் விபத்துக்கான காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரையன் கருத்து.

* மனுஸ்மிருதியை மைனர் பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிய ஒருவருக்கு மேற்கோள் காட்டிய குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதி, அதன் கொள்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதை உணர வேண்டும். உரி மைகள் மற்றும் மிக முக்கியமாக, பெண்களின் உரிமை களை விளக்குவதற்கு அதைப் பயன்படுத்த முடியாது என்கிறார் கட்டுரையாளர் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ரோஹின் பட்.

தி டெலிகிராப்:

* ரயில்வே பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 2017இல் நரேந்திர மோடி அரசு உருவாக்கிய சிறப்பு நிதியானது கால் மசாஜர்கள், கிராக்கரிகள், மின்சாதனங்கள், மரச் சாமான்கள், குளிர்கால ஜாக்கெட்டுகள், கம்ப்யூட் டர்கள் மற்றும் எஸ்கலேட்டர்கள் வாங்க, தோட்டங்களை உரு வாக்க, கழிப்பறை கட்ட, சம்பளம், போனஸ் மற்றும் கொடி கட்டுதல் போன்றவற்றுக்கு தவறாக பயன்படுத்தப் பட்டதாக சி.ஏ.ஜி. அறிக்கை.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* முந்தைய பாஜக ஆட்சியில் கருநாடகாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு உள்ளதா? என ஆய்வு செய்ய சித்தராமைய்யா அரசு முடிவு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment