முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக 1971 பொதுத்தேர்தலில் 184 இடங்களைப் பெற்று அமைத்த ஆட்சியின் போது தலைமைச் செய லாளராக திரு.பி.சபாநாயகம் அய்.ஏ.எஸ். அவர்களை நியமித்தார். ஏற்கெனவே அவரை ரெவின்யூ போர்டு உறுப்பினராக வும், மின்சார வாரியத் தலைவராகவும் நியமித்திருந்தார்.
திரு.பி.சபாநாயகம் அய்.ஏ.எஸ். தலைசிறந்த ஆளுமைத் திறன் வாய்ந்தவர்; பெரிதும் தமக்குச் சரியென்று பட்ட கருத்தைக் கோப்புகளில் எழுதும் நேர்மையும், சுதந்திர உணர்வும் கொண்டு செயல்பட்டவர்.
1973-இல் தந்தை பெரியார் மறைவையொட்டி அவருக்கு அரசு மரியாதை கொடுக்க முதலமைச்சர் கலைஞர் முடிவு செய்த போது, தலைமைச் செயலாளராக இருந்து கடமையாற்றிய சீரிய பண்பாளர்.
வகுப்புரிமை ஆணை கர்த்தாவான எஸ்.முத்தையா (முதலியார்) அவர்களுக்கு மிக நெருங்கிய உறவினர் - திரு.பி. சபாநாயகம் அவர்கள்.
அவர் நியமனத்திற்கு 1971-இல் பெரியாரின் பங்கு பெரிதும் உண்டு என்பதை அருகில் இருந்தவர்கள் அறிவர்.
அவர் நிறை வாழ்வு (101 வயது) வாழ்ந்து மறைந்துள்ளார் என்றாலும் அவரது இழப்பு பேரிழப்பு ஆகும்.
அவரது குடும்பத்தினருக்கு நமது ஆறுதலும், ஆழ்ந்த இரங்கலும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22-6-2023
No comments:
Post a Comment