கல்லக்குறிச்சி, ஜூன் 23 - 27.05.2023 அன்று மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் அலுவலகத்தில் கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலை வர் பெ.எழிலரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் வீர.முருகேசன் வரவேற் புரை ஆற்றினார். மாநில திராவிடர் கழக மருத்துவரணி செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார், மாநில திராவிடர் மாணவர் கழக துணைச் செயலாளர் S.E.R திராவிடபுகழ், மாவட்டச் செயலாளர் ச.சுந் தரராசன், மாவட்ட கழக இலக்கிய அணித்தலைவர் புல வர் பெ.சயராமன், மாவட்ட காப்பாளர் ம.சுப்பராயன், சென்னை சோழிங்கநல்லூர் கழக அமைப்பாளர் குழ.செல் வராசு, ஆசிரியர் ராமன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பகுத்தறிவாளர் கழ கத் தலைவர் இரா.தமிழ்செல் வன், மாநில பொதுச்செயலா ளர்கள் ஆ.வெங்கடேசன்; வி. மோகன், மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் ஆடிட்டர் சி.ஏ.கு.ரஞ்சித் குமார், சிறப்பு அழைப்பாளர் புதுவை மின்துறை குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு கழகச் செயல்பாடுகளைப் பற்றி விளக்கிப் பேசினார்கள். இறுதியில் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் படிவங்களை மாவட்டத்தலைவர் பெ.எழில ரசனிடம் மாவட்டச் செயலா ளர் வீர.முருகேசன் முன்னிலை யில் வழங்கினார். இறுதியில் கல்லை நகர திராவிடர் கழக செயலாளர் நா.பெரியார் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பகுத்தறிவாளர் கழகத்தில் 30.06.2023 தேதிக்குள்ளாக குறைந்தது 100 உறுப்பினர்களை சேர்ப்பது எனவும், உண்மை பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேஷனிலிஸ்ட் இதழ்களுக்கு சந்தா பெறுவது எனவும்,
ஆகஸ்ட் 2023-க்குள் மீண் டும் மாவட்ட பகுத்தறிவாளர் கலந்துரையாடல் கூட்டம் ஏற் பாடு செய்து, மாநிலப் பொறுப் பாளர்களை கலந்துக்கொள்ள செய்வது எனவும்,
வைக்கம் நூற்றாண்டு விழா சார்பாக நடைபெற உள்ள மாநாட்டில் இம்மாவட்டம் சார்பாக அதிகமான பகுத்தறி வாளர்களை பங்கேற்கச் செய்வதென தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
No comments:
Post a Comment