நாங்கள் சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்தவர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 3, 2023

நாங்கள் சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்தவர்கள்!

சேகர் குப்தா: நீங்கள் உங்களது அறிக்கை ஒன்றில், “ராமர் எந்தப் பொறி யியல் கல்லூரியில் படித்தார்? என்று கேட்டிருக்கிறீர்களே? 

கலைஞர்: அது என்ன ஒரு பெரிய கேள்வியா?

சேகர் குப்தா: இவ்விஷயத்தில் காங்கிரசில் உள்ளவர்கள் மகிழ்ச் சியாக இல்லை. நீங்கள் தேவையற்ற அறிக்கை கொடுத்திருக்கிறீர்கள் என்று கருதுகிறார்கள். வால்மீகி ராமா யணத்தை மேற்கோள் காட்டி ‘ராமர் குடித்தார்’ என்று கூறினீர்கள்... 

கலைஞர்: ஆமாம். நான் வால்மீகி ராமாயணத்தைத் தருகிறேன். நீங்கள் தயவு செய்து அதைப் படித்துப் பாருங் கள். எங்களுக்கு அந்தத் திட்டம் (சேது சமுத்திரம்) வேண்டும்!

நான் இப்பொழுது முதலமைச் சராக இருக்கிறேன். ஆனாலும், நான் ஒரு சுயமரியாதைக்காரன்! நாங்கள் சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்த வர்கள்! பெரியாரின் மாணவர்கள்!

சேகர் குப்தா: நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?

கலைஞர்: ஆமாம். ஒரே ஒரு கடவுளை நம்புகிறேன்.

சேகர் குப்தா: எந்தக் கடவுளை நம்புகிறீர்கள்?

கலைஞர்: எனது மனசாட்சியை.

(என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் கலைஞர் அளித்த பேட்டியிலிருந்து)

No comments:

Post a Comment