கேரளா முதல் மகாராட்டிராவின் தென் பகுதி வரை புயலால் கனமழைக்கு வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 7, 2023

கேரளா முதல் மகாராட்டிராவின் தென் பகுதி வரை புயலால் கனமழைக்கு வாய்ப்பு

மும்பை, ஜூன் 7 தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மய்யம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட் டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபோர் ஜோய்' என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும். இந்த புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலால் கேரளா முதல் மராட்டிய மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் 'பிபோர்ஜோய்' புயல், மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment