மும்பை, ஜூன் 20 - மஹாராட்டிரா வில் அலைபேசியில் 'வாட்ஸாப்' முகப்பு படமாக அவுரங்கசீப்பை வைத்த நபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
கருநாடகாவிலுள்ள மைசூரை 18ஆம் நூற்றாண்டில் ஆண்ட மன்னர் திப்பு சுல்தான் மற்றும் முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆகியோரை புகழ்ந்தும், மராட்டிய மன்னர் களை சிறுமைப்படுத்தியும் சமூக வலைதளங்களில் வெளி யான பதிவால் மகாராட்டிராவில் வன்முறை வெடித்தது. இந்தப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து அமைப்பு கள் நடத்திய 'பந்த்'தில் கலவரம் வெடித்தது.
கோலாப்பூர், அஹமது நகர் உள்ளிட்ட இடங்களில் நடந்த இந்த போராட்டங்களை தடியடி, கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தி காவல்துறையினர் அடக் கினர். சமூக வலைதள பதிவுகளுக்கு கண்டனம் தெரிவித்த மஹாராட்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், 'இது போன்ற விசயங்களை ஊக்குவிக்கக் கூடாது' என்றார்.
இந்நிலையில், நவி மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் அலைபேசியில் வாட்ஸாப் செயலியின் முகப்பு படமாக அவுரங்கசீப் படம் வைத்திருந்ததை அடுத்து, அவர் மீது காவல்துறையினா வழக்குப் பதிவு செய்து உள்ளனர். ஹிந்து அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இது குறித்து விளக்கமளிக்க அவருக்கு 'தாக்கீது' அனுப்பி யுள்ளனர்.
கோட்சே படம் வைத்திருந்தால் விருது கொடுத்திருப்பார்களோ?
No comments:
Post a Comment