"பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் நாடு முழுவதும் இடதுசாரி பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மக்கள் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
இது உண்மைதானா? உண்மையைப் பேசுவதேயில்லை என்று "சத்தியப் பிரமாணம்" செய்து கொண்டு கிளம்பி இருக்கிறார்கள் போலும்!
அமித்ஷா தலைமையிலான உள்துறை அமைச்சரகம் வெளியிட்ட தாக்குதல் தொடர்பான புள்ளி விவரங்கள் இதோ:
2020ஆம் ஆண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகள் சார்பில் 398 தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளதாக ஒன்றிய அரசின் (19.9.2022) அறிக்கையே சொல்கிறது. இதில் 71 பாதுகாப்புப் படையினர், 80 பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள்.
« 2016 சனவரி 2 ஆம் நாள் நடந்தது பதான்கோட் தாக்குதல். இதில் 7 பாதுகாப்புப் படை வீரர்களும் 6 தீவிரவாதிகளும் இறந்தார்கள். தீவிரவாதிகள் இந்திய ராணுவ உடையில் வந்தார்கள். மறுநாள் கையெறி குண்டு வெடித்து மேலும் ஒரு வீரர் இறந்தார். அதற்கு மறுநாள் வான்படைத்தளத்தை மீட்கும் நடவடிக்கை நடந்தது.
« 2016 பிப்ரவரியில் பொம்பொரியில் நடந்த தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
« 2016 செப்டம்பரில் உரியில் உள்ள இந்திய ராணுவத் தலை மையகத்தில் நடந்த தாக்குதலில் 19 படைவீரர்கள் பலியானார்கள்.
« 2017 ஏப்ரல் 24 அன்று இந்தியப் பாதுகாப்புப் படையினர் மீது சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத் திய தாக்குதலில் 24 வீரர்கள் பலியானார்கள்.
« 2017 போபால் உஜ்ஜைனி தொடர் வண்டியில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் காயம் அடைந்தார்கள்.
« 2017 அமர்நாத் கோவில் தாக்குதலில் 7 பேர் பலியா னார்கள்.
« 2017 லெத்திபோரா கமாண்டோ பயிற்சி நிலைய தாக்கு தலில் 5 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.
« 2019 பிப்ரவரி 14 புல்வாமா தாக்குதல் நடந்தது. ஒரு தற் கொலை தீவிரவாதி தாக்கியதில் 40 படைவீரர்கள் பலியானார்கள்.
« 2021 அக்டோபர் மாதத்தில் பொதுமக்கள் 11 பேர் பலி யானார்கள்.
« 2022 ஆகஸ்ட் 11 இரஜோரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்துள் ளார்கள்.
2015ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிரவாதிகள் தாக்குதல் அதிகமாக நடந்துள்ளது. 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி பயங்கரவாத தாக்குதலால் அதிகம் பாதிக்கப் படும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருப்பதாக அறி விக்கப்பட்டது. 2016இல் 75 பாதுகாப்பு படையினர் கொல்லப் பட்டுள்ளார்கள்.
2017ஆம் ஆண்டில் நடந்த மொத்த தீவிரவாத தாக்குதல்களில் 318 பேர் பலியாகி இருக்கிறார்கள். 2018ஆம் ஆண்டில் மட்டும் 451 பேர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் 2018இல் பலியானவர் எண்ணிக்கைதான் அதிகம்.
இந்தியாவில் நடந்து வரும் நக்சல் தீவிரவாதச் செயல்களால் ஏற்படும் உயிரிழப்பை 200 என்ற எண்ணிக் கைக்கும் குறைவாக குறைத்துள்ளதை தனது சாதனையாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
3க்கும் மேல் ஒருவர் இறந்தால் அதனை பெரிய தாக்குதல் என்பார்கள். 2014 - 2018 காலக்கட்டத்தில் மட்டும் இந்தியாவில் 388 பெரிய தாக்குதல்கள் நடந்துள்ளன. இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்? ஒன்றிய பா.ஜ.க. அரசு அல்லவா? பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் டிரோன்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், இந்த ஆண்டு மட்டும் 150 தாக்குதல் நிகழ்வுகள் நடந்துள்ளதாகவும், இதன் மூலமாக ஆயுதங்களும், போதை மருந்துகளும் கடத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன. 2021 ஆம் ஆண்டிற்குப் பிறகு கிட்டத்தட்ட நாள் ஒன்றுக்கு ஒரு இஸ்லாமியர் கொல்லப்படுகிறார். நாள் ஒன்றிற்கு 3 தாழ்த்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர் இருவர் கொல்லப்படுகிறார். நாளொன்றுக்கு 3 தீண்டாமைக் கொடுமைகள் பதிவாகி வருகின்றன.
எல்லாவற்றுக்கும் 'மகுடமாக' மணிப்பூர் மாநிலமே பற்றி எரிகிறது! மே இறுதி வாரத்தில் இருந்து இன்றுவரை மாநிலத்தில் தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு, இணை யம், அலைபேசி அனைத்துமே துண்டிக்கப்பட்டு அங்கு என்ன நடக்கிறது என்று உலகத்திற்கே தெரியமல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
அமித்ஷா அங்கு சென்று வந்தும்கூட கலவரம் அடங்கிய பாடில்லை. ஆனால் மோடி சொகுசாக அமெரிக்கா, எகிப்து என்று சென்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரத்தை பைடன் மனைவிக்குப் பரிசளிக்கிறார்.
இந்த இலட்சணத்தில் ஒன்றிய பிஜேபி ஆட்சி நடை பெறும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா கொஞ்சம்கூட உண்மையின்றி, நாடு முழுவதும் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறுவதற்கு எவ்வளவு 'துணிச்சல்' இருக்க வேண்டும்!
No comments:
Post a Comment