22.6.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மதத்தின் அடிப்படையில் அரசியல் நடத்தும் பா.ஜ.க.வை 2024 பொதுத் தேர்தலில் வீழ்த்துவதே ஜூன் 23-ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தின் இலக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
* டில்லி நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் மோடி அரசின் அவசர சட்டத்தை 23-ஆம் தேதி கூட்டத்தின் முதன்மை திட்டமாக பேசிட டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம்.
தி டெலிகிராப்:
* 'மணிப்பூரில் எங்களுக்கு இப்போது யோகா தேவையில்லை. நமது மக்கள் படும் துன்பங்களுக்கு இப்போது யோகாவல்ல - அமைதி தேவை. பன்னாட்டு யோகா தினத்தை புறக்கணித்த மணிப்பூரி அமைப்பு, அமெரிக்காவில் பிரதமரின் யோகாசனத்தை கண்டித்துள்ளது
தி இந்து:
* கருநாடக அன்ன பாக்யா திட்டத்தை மோடி அரசு புறக்கணிக்கிறது. திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் ஒன்றிய தொகுப்பில் இருந்து மாநில அரசுகளுக்கு உணவு தானியங்களை விற்பனை செய்வதை ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நாடு முழுவதும் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஜூன் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது என அய்க்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி.தியாகி தகவல்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment