மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் சூறாவளிப் பயணமாக கடந்த 04-06-2023 ஞாயிறு காலை 9 மணிக்கு தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம், மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞரணி நா.கணேசன், பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வா.நேரு, மாவட்ட தலைவர் த.ம.எரிமலை, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பாலா ஆகியோர் இணைந்த குழு மதுரை நகரிலிருந்து மேலூர் நோக்கி புறப்பட்டு 40 ஆண்டு கால இயக்கத்தோழரும் வழக்குரைஞரணி மகேந்திரன் அவர்க ளோடு இணைந்து தந்தைபெரியாரைஅழைத்து மேலூரில் கூட்டம் நடத்தியவருமான மேலூர் பெரியார் பெருந்தொண்டர் அய்யா வீரமணி அவர்களை சந்தித்தோம் அவர் இயக்கத்திற் கும் அவருக்குமுள்ள பல்வேறு தொடர்புகளையும் நினைவு களையும் பரிமாறிக் கொண்டார். தனக்கு ஒத்துழைப்பு நல்கினால் மீண்டும் மேலூர் பகுதியில் இயக்க கொள்கை வளர்ச்சியை மிகச் சிறப்பாக செய்வேன் என்று கூறினார் .நிச்சயமாக பொறுப்பாளர்கள் அனைவரும் அவருக்கு ஒத்து ழைப்பு தந்து மேலூர் பகுதியிலே அடுத்தடுத்து நமது கழகத் தினுடைய பிரச்சாரங்களை பல்வேறு வகையில் முன்னெடுத்து சிறப்பாக செய்வோம் என்று அவரிடத்தில் உறுதி கூறினோம் கழகப் பொறுப்பாளர்கள் அனைவருடைய ஒத்துழைப் போடும் மேலூர் பகுதியில் நமது கழக பிரச்சாரங்கள் மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் செய்வோம் நன்றி.
வழக்குரைஞர் இராதா சுப்பையா
11 மணிக்கு வழக்குரைஞரணி மகேந்திரன் அவர்களின் உற்றதோழருமான இயக்கப் பற்றாளர் வழக்குரைரணி இராதா சுப்பையா, துணைவியார், மகன் இராஜ்கணேஷ் ஆகியோரை சந்தித்தோம் அனைவரையும் அன்போடு வரவேற்று மகிழ் வோடு பல்வேறு கருத்துகளை பரிமாறிக் கொண்டார்கள் அது மட்டுமல்ல அவர்களின் செல்வி மது இயக்கத்தில் இணைந்து செயல்படவிருப்பம் உள்ளதாக தெரிவித்தார்.அது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது அய்யா ராதா சுப்பையா அவர்கள்200 பேருக்கு மேல் அமரக்கூடிய தனது மாடிப்பகுதியை அரங்கு கூட்டங்கள் நடத்திட பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னது மேலும் உற்சாகம் தந்தது. இயக்க பணிகள் பல்வேறு வகையில் ஒன்றிணைந்து செயற்பட நல்வாய்ப்பாக சந்திப்பு இருந்தது.
12-30க்கு காயாம்பட்டியில் நமது திராவிடர் கழக புறநகர் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் குடும்ப உறுப்பினர் களை சந்தித்து மகிழ்வோடு உரையாடினோம் தற்பொழுது செய்து வரும் இயக்க பணிகளை இன்னும் அதிகமாக விரிவுபடுத்தி பல்வேறு வகைகளில் இயக்க கொள்கைகளை மய்யப்படுத்தி நிகழ்வுகள் நடத்திடும் கருத்து பறிமாற்றத்தோடு பொறுப்பாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெரும் மகிழ்ச் சியை வெளிப்படுத்தினர்.
பெரியார் பெருந்தொண்டர் சுந்தர்ராஜன்
ஒத்தக்கடை பகுதியில் விரைவில் கூட்டம் நடத்த முடிவு செய்து மதிய உணவிற்கு பின் 2 மணிக்கு திருமங்கலம் பெரியார் நகர் பெருந்தொண்டர் சுந்தர்ராஜனிடம் நலம் விசாரித்து ஆடை அணிவித்து பெரியார்சிலை முன்பு நிழற்படம் எடுத்து புறப்பட்டோம்.
திருமங்கலப் பயணத்திலிருந்து மாவட்டச் செயலாளர் முத்துக்கருப்பனுடன் இணைந்துபேரையூர் புறப்பட்டோம்.
மதியம் மூன்று மணி அளவில் பேரையூர் நகர செயலாளர் தோழர் பாண்டியராஜன் குடும்ப உறுப்பினர்களை சந்தித் தோம். அவர் விக்கிரமங்கலத்தில் இருந்த காலகட்டத்திலேயே இயக்கத்தில் அங்குள்ள தோழர்களோடு எப்படி செயல்பட்டார் என்ன நிகழ்வுகளை எல்லாம் இயக்க பிரச்சார கொள்கைக்கு நடத்தினார்கள் என்பதையெல்லாம் பகிர்ந்து கொண்டதோடு அவருடைய துணைவி யாரும் இயக்கத்திற்கு உறுதுணையாக இருப்பதை பற்றியும் எடுத்துக் கூறினார் அவர்களுடைய துணைவியார் நம்மை அன்போடு வரவேற்று அவருடைய குழந்தையும் நம்மோடு மகிழ்வோடு உரையாடினார்கள் அங்குள்ள நூலகத்திற்கு விடுதலை அனுப்பி வைத்தால் நான் அதனை பெற்று தினமும் நூலகத்தில் கொண்டு சேர்க்கிறேன் என்று நம்மிடம் உறுதி அளித்ததோடு அங்கு இயக்க கொள்கை பணிகளையும் தொடர்ந்து ஒருங்கிணைந்து செய் திடுவேன் என்றும் கூறினார் மகிழ்வோடு பொறுப்பாளர்கள் அனைவரும் சாப்டூருக்கு ஊருக்கு பெரியார் பற்றாளர்களின் குடும்பத்தை சந்திப்பதற்காக கிளம்பினோம்.
எழுத்தாளர் நேரு
சாப்டூரில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் நேருவினுடைய உறவினர்களும் பெரியார் பற்றார்களையும் சந்தித்து மகிழ்வோடு புத்தகம் வழங்கி உரையாடினோம் அவர்களும் மகிழ்வோடு நம்மிடத்தில் உரையாடி சாப்டூரில் இயக்க பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்திட முழு ஒத்து ழைப்பும் உறுதுணையும் தருவதாக தெரிவித்தார்கள் அவர் களுக்கு நன்றி சொல்லிவிட்டு எழுமலையில் நமது கழக குடும்ப உறுப்பினர்களை சந்திக்கப் புறப்பட்டோம்/
6 மணிக்கு உசிலையில் வழக்குரைஞர் நா.கணேசன் அவர்களின் இளம் வழக்குரைஞரும் பெரியார் பற்றாளருமான மனோஜ்குமார் தேநீர் விருந்தளித்து மகிழ்வை தெரிவித்தார். நாமும் மகிழ்ச்சியோடு அவருக்கு நன்றி சொல்லிவிட்டு நமது இயக்க புத்தகங்களை வழங்கினோம். அதைப் பெற்றுக் கொண்ட அவர் உசிலம்பட்டி பகுதியில் நடக்கும் பிரச்சார நிகழ்வுகளுக்கு துணை நிற்பதாக கூறியவருக்கு நாம் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து மாநில பொதுக்குழு உறுப்பினர் மன்னர் மன்னன் மகள் தேன்மொழி, பேத்தி நிலானி ஆகி யோரைச்சந்தித்தபோது மகிழ்வோடு இயக்க நிகழ்வுகள் குறித்து பேசியதோடு உசிலம்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில கிராம பிரச்சாரங்கள் மூலமாகவும் இயக்க கொள்கை விழிப் புணர்ச்சி செயல்பாடுகளின் மூலமாகவும் பயிற்சி வகுப்புகள் மூலமாகவும் பல்வேறு வகைகளில் நாம் இயக்க கொள்கை களை அந்த மக்களிடத்தில் எடுத்துச் சென்று அவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றனர்.
விக்கிரமங்கலம்
அங்கு சந்திரன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தோம் குடும்பத்தினரும் மாதா மாதம் விக்கிரமங்கலத் தில் தொடர்ந்து பிரச்சார கூட்டங்கள் நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளதை சந்திரன் தெரிவித்தது நமக்கு மிகுந்த மகிழ்வாக இருந்தது. அவர்களோடு எல்லா தோழர்களும் ஒருங்கிணைந்து விக்கிரமங்கலத்திலும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளிலும் இயக்க பிரச்சாரத்தைக் கொண்டு செல்ல உறுதுணையாக இருப்போம் என்பதை தெரிவித்து விட்டு மாவட்ட அமைப்பாளர் ரோ.கணேசன் இல்லம் சென்ற போது எப்போதும் குடும்ப உறவாக எண்ணி அம்மண்ணுக் குரிய மொழியில்அன்போடுபேசியவருக்குபுத்தகம் வழங்கி நன்றி சொல்லி புறப்பட்டோம். 9-30க்கு சோழவந்தான் பகுதியின் இயக்க பொறுப்பாளர்கள் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவந்த எங்களை. தங்கராஜ்வரவேற்க அவரோடு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வாசுதேவன் அவர்களை சந்தித்தபோது நினைவு தவறிய நிலையிலும் கருப்புச் சட்டையை பார்த்ததும் மகிழ்வோடு உரையாடினார்.
மேலும் தோழர் இரஜினி, ஆறுமுகம் தங்கராஜ் அவர்களின் இல்லம் சென்று குடும்பத்துடன் உறவாடி நூல்கள் வழங்கி மகிழ்வுடன் பயணத்தை முடித்து அண்ணன் தங்கராஜின் மகன் கதிரவன் உணவகம் சென்று இரவு உணவு முடித்து 11 மணிக்கு மதுரை புறப்பட்டோம். காலை முதல் இரவு வரை நடந்த 15 மணிநேர இயக்க தொடர்பயணம் நடை பெற இருக்கும் புறநகர் மாவட்ட பிரச்சாரத்திற்கு மிகப்பெரிய அடித்தளமாக அமையும் என்பது உறுதியானது.
- பாலா, மாநில இளைஞர் அணி துணை செயலாளர்
No comments:
Post a Comment