மயிலாடுறை, ஜூன் 26 - மயிலாடுறை மாவட்டம் கொள்ளிடத்தில் வைக்கம் போராட்ட நூற் றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் 24-.6.-2023 அன்று மாலை 6 மணியளவில் கொள்ளிடம் பேருந்து நிலையம் அருகில் ஒன்றியத் தலைவர் பி.பாண்டி யன் தலைமையில் நடைபெற் றது.
மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் ஞான.வள்ளுவன், மயிலாடு துறை ஒன்றியத் தலைவர் ஆர். டி.வி.இளங்கோவன், நகரத் தலைவர் சீனி.முத்து, சீர்காழி ஒன்றியத் தலைவர் சா.சந்திர சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியச் செயலாளர் பூ. பாண்டுரங்கன் வரவேற்புரை யாற்ற மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் அறிமுக உரை யாற்றி நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ. சாமிதுரை தொடக்க உரையாற்ற அவ ரைத் தொடர்ந்து மயிலாடு துறை மாவட்டத் தலைவர் கட வாசல் குணசேகரன், கொள்ளி டம் ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஜெயப்பிரகாஷ், கொள்ளிடம் ஒன்றிய திராவிட முன் னேற்ற கழக செயலாளர் செல்ல.சேது.ரவிக்குமார் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரை யாற்றினார்.
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் அனுபவித்த சிறைக் கொடுமைகளையும் அவரோடு அன்னை நாகம்மை யாரும் கண்ணம்மையாரும் போராட்டத்தில் ஈடுபட்ட தீரத்தையும் உணர்ச்சி பொங்க விவரித்தவர் வைக்கத்தில் தந்தை பெரியாரின் போராட் டத்தால் சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றிபோல நீதிக் கட்சி ஆட்சி தொடங்கி முத் தமிழறிஞர் கலைஞரின் ஆட்சி முழுமைக்கும் சமூக நீதி பெண் ணுரிமை விவசாயம் போன்ற வற்றில் நிகழ்ந்த புரட்சித் திட்டங்கள் மட்டுமின்றி அரசு அலுவலர்கள் மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் திருநங் கையர் என பலதரப்பினரும் பலன் பெறும் வகையில் செயல் படுத்தப்பட்ட எண்ணற்ற பயன் களைப் பட்டியலிட்டுக்காட்டி அதனை சற்றும் வழுவாமல் காத்து இந்திய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தேவையானது திராவிட மாடலே என்பதை நிரூபித்துக் காட்டிவருபவர் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் பேசினார்.
பிற மாநிலங்கள் வியந்து நோக்கும் இந்த ஆட்சிக்கு ஊறு செய்யும் நோக்கில் பாஜக சங்பரிவார் கூட்டங்களும் அவர்களின் ஊதுகுழலாக திரி புகளைப் பேசிவரும் ஆளுநரை யும் அவர்களின் பொய்யான பிரச் சாரங்கள் இந்தப் பெரியார் மண்ணில் ஒருபோதும் எடு படாது என்ற வகையில் நகைச் சுவையோடு அவர் பேசியது கூட்டத்தைக் கேட்ட பொது மக்களைப் பெரிதும் கவர்ந்தது.
கூட்டத்தில் மயிலாடுதுறை நகர செயலாளர் பூ.சி.காமராஜ், சீர்காழி ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.செல்வம், மயிலாடு துறை நகரத் துணைத்தலைவர் இரெ.புத்தன், மயிலாடுதுறை திராவிடர் கழக தோழர் தங்க. செல்வராஜ் வைத்தீசுவரன் கோயில் திராவிட முன்னேற்ற கழக மாவட்ட பிரதிநிதி கமல நாதன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட துணைச்செயலாளர் அரங்க. நாகரத்தினம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment