கடலூர் மாவட்டம், சிதம் பரத்தில் விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நேற்று (5.6.2023) செய்தியாளர்களிடம் கூறியதாவது, அண்மையில் ஒடிசாவில் நடந்த ரயில்கள் கோர விபத்தில் 275 பேர் மரணமடைந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்திற்கு ரயில்வே துறை, ஒன்றிய அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என அத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு ரயில்வே மண்டல பொதுமேலாளர், அங்குள்ள பிரச்சினை குறித்து ரயில்வே அமைச்சகத்திற்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய தணிக்கை யாளர் குழு சிஏஜி அளித்த அறிக்கையில் முன்னெச்சரிக் கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தெரிவித்துள்ளார்கள். சிஏஜி அறிக் கையின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும். அவை ரயில்வே அமைச்சகத்தால் அலட்சியப்படுத்தப்பட் டுள்ளது.
இந்த விபத்திற்கு மோடி பொறுப்பேற்க வேண்டும். ரயில்வே அமைச்சர் பதவி விலகி விசாரணைக்கு ஒத் துழைக்க வேண்டும். மம்தா அமைச்சராக இருந்த போது கவாச் என்கிற கவசப் பாது காப்பு திட்டத்தை நடை முறைப்படுத்தினார். பாது காப்பு திட்டத்திற்கு ரூ.952 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டம் செயல்படுத் தப்படவில்லை. கோர ரயில்வே விபத்து குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட்டு, சிறப்பு புலனாய்வு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும்.
விழுப்புரம் மேல்பாதி கிரா மத்தில் ஏப்.8ஆம் தேதி கோயிலுக்குள் நுழைந்த கல்லூரி மாணவர் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு யாரும் கைது செய்யப்படவில்லை. அக் கோயில் இந்து சமய அறநிலை யத்துறைக்கு சொந்தமானது. ஆனால் பாமக முன்னணி நிர்வாகிகள் அக்கோயில் தனி யாருக்கு சொந்தமானது என கூறுகின்றனர்.
இதில் காவல்துறை, இந்து அறநிலையத்துறை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் இந்து அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோயில்களில் ஆதி திராவிட மக்கள் சென்று வழிபாடு செய்ய முடியவில்லை என்ற நிலை உள்ளது. 1947இல் கோயில் நுழைவு சட்டம் இயற்றப்பட்டது. கோயிலுக் குள் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. தனி நபர்கள் கோயிலாக இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாது. இந்து அறநிலையத்துறை தொடங்கப் பட்ட பின்னர் 1959-ல் அச் சட்டம் உறுதிப்படுத்தப்பட் டப்பட்டது. மேல்பாதி கிராம மக்களின் உரிமை கோரி வரு கிற ஜூன் 9ஆம் தேதி சென்னை யில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதே போன்று மதுரையைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜாதிய வன் முறை கட்ட அவிழ்த்தவிடப் பட்டு தாக்குதல் நடைபெற் றுள்ளது. இதில் 3 பேர் படுகாய மடைந்துள்ளனர். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. யாரையும் கைது செய்யவில்லை. எனவே வருகிற ஜூன் 12ஆம் தேதி மதுரையில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு கிறது.
மேக்கேதாட்டு அணை குறித்து காவிரி நதி நீர் ஆணை யத்திடம் எடுத்துரைத்துள் ளோம். அதனை மீறி ஒரு செங் கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாது. புதிய நாடாளு மன்றம் பாஜகவின் ஹிந்து ராஷ்டிரிய கனவுத் திட்ட மாகும். அம்பேத்கரின் அரச மைப்பு சட்டத்தை ஏற்காத சாவக்கரின் பிறந்தநாளன்று நாடாளுமன்ற புதிய கட்ட டத்தை திறந்து சமர்ப்பணம் செய்துள்ளனர்.
888 இருக்கைகள் உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து தொகுதி கள் உயர்த்தப்படவுள்ளது. தமிழ் நாட்டில் தொகுதி எண்ணிக் கையை உயர்த்த முடியாது. உத்தரப்பிரதேசம், மத்திய பிர தேசம், அரியானா உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் தொகுதிகளை உயர்த்தி பாஜக தனிப்பெரும்பான்யை பெற்று மீண்டும் ஆட்சியமைக்க திட்ட மிட்டுள்ளது.
தென்னிந்திய மாநிலங்கள் ஆதரவின்றி வெற்றி பெற பாஜக தொகுதி வரையறை செய்ய உள்ளதாக கூறப்படு கிறது.
2024இல் பாஜகவை வீழ்த்த மாநிலங்கள் வாரியாக கட் சிகள் ஓரணியில் சேர வேண் டும். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறை யில் உள்ள சிறைக் குற்ற வாளிகளை நன்னடத்தை கருதி விடுதலை செய்ய வேண் டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment