பெரியார் என்றதும் "உருவத்தில்" நினைவுக்கு வருவது அவரது தாடியும், கருப்புச் சட்டையும்! "கொள்கை" என்றதும் நினைவுக்கு வருவது கடவுள் மறுப்பும், ஜாதி ஒழிப்பும் எனக் கீரமங்கலத்தில் நடை பெற்ற பயிற்சி முகாமில் கிராமப்புற மாணவர்கள் அதிரடி காட்டினர்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள கீரமங்கலம் என்பதே ஒரு பேரூராட்சி. மொத்தமே சில ஆயிரம் மக்களும், 35 சதுர கிலோ மீட்டரும் கொண்ட ஒரு சிறிய பரப்பளவு. அந்தப் பேரூராட்சியை சுற்றிய மாங்காடு, செரியலூர் இனாம், கருவன் குடியிருப்பு, கீழக்கொள்ளக்காடு, சேந்தன்குடி, நெய்வத்தளி, கரம்பக் காடு, அணவயல், பாலகிருஷ்ணாபுரம், இராமசாமிபுரம், பனாங்குளம், மொட்ட மாங்கொல்லை போன்ற குக்கிராமங்களில் இருந்து வந்த மாணவர்கள் அனை வரையும் அசத்திவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்! "அறிவியல் சாதனங்கள் வளர, வளர சமூகம் மேம் படும்", என்றார் பெரியார். ஒரு பக்கம் அழிவுகளைப் பார்க்க முடிகிறது என்றாலும், நேற்றைய குக்கிராம மாணவர்களின் பரிணாம வளர்ச்சியைக் கண்டு பரவசம் அடைவதைத் தவிர்க்க முடியவில்லை!
நாடெங்கும்
பயிற்சிப் பட்டறைகள் !
மே மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், 365 நாளும், 24 மணி நேரங்களும் - அதாவது தூங்கும் நேரம் தவிர - தமிழ்நாடெங்கும் பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் நடக்க வேண்டும் என ஒரு அறிவிப்பு செய்தார்கள்! அதனையொட்டி மே 27 முதல், ஜூலை 30 ஆம் தேதி வரை 17 ஊர்களில் முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டன; அதற்கான அட்டவணையும் விடுதலையில் வெளியாகின! அந்த வகையில் சென்னை, கீரமங்கலம், தஞ்சாவூர், நீடாமங்கலம், கும்பகோணம், விருத்தாசலம், செந்துறை, குற்றாலம், திருவாரூர், திருமருகல், இலால்குடி, துறையூர், சேந்த நாடு, கோமுகி அணை, பேராவூரணி, ஆதனக் கோட்டை ஆகியவை முதல் சுற்றில் பெரு வாய்ப்பைப் பெற்றவை. அடுத்தடுத்த சுற்றுகளில் தங்கள் ஊர் களையும் சேர்க்க வேண்டி பொறுப்பாளர்கள் அணிய மாகி வருவது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது!
ஏன் கடவுள் இல்லை?
அந்த வகையில் 4.6.2023 அன்று கீரமங்கலம் அன்னை விழா அரங்கத்தில் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. குறுகிய நேரத்தில், அந்தக் குக்கிராமத் தில், நிறைவான ஏற்பாட்டை செய்திருந்தார்கள்.
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழக வரலாறு
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழக வரலாறு என்கிற தலைப்பிலான முதல் வகுப்பை முனைவர் அதிரடி அன்பழகன் எடுத்தார். "பெரியார் என்றதும் உருவத்தில், கொள்கையில் நினைவுக்கு வருவது எது?", என்கிற கேள்வியோடு தொடங்கினார். அதற்கான விடை தான் முதல் பத்தியில் இருப்பது. இந்த நாட்டில் பல்லாயிரம் மக்கள் பால்குடம் எடுக் கிறார்கள், காவடி தூக்குகிறார்கள், பக்தியில் திளைக் கிறார்கள்! அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டுதான் கடவுள் இல்லை: இல்லவே இல்லை என்றார் பெரியார்! கல்வி வேண்டும் என்றால் நீ படி, உன் மீது நம்பிக்கை வை, உழைத்து முன்னேறு என்றார் பெரியார். கடவு ளிடம் கேட்டால் எல்லாம் கொடுப்பார் என்பார்கள், அது பொய். பொய்யான தகவலை கூறி, நம் முன் னேற்றத்தை தடுத்த காரணத்தினாலே பெரியார் கடவுள் இல்லை என்றார்.
பெரியார் வந்தார்!
அனைத்தையும் தந்தார்!!
மனிதனைப் படைத்தது கடவுள் என்றால் ஏழை - பணக்காரன், உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி, ஆண் டான் - அடிமை, ஆண்- பெண் ஏற்றத்தாழ்வுகள் ஏன் இருக்க வேண்டும்? உலக நாடுகளில் எந்தக் கடவுளும் அப்படி படைக்கவில்லையே? நமக்குப் படிப்பு வராது என்றார்கள். நம் நாக்கில் சரஸ்வதி உட்காராது என் றார்கள். திண்டுக்கல்லில் நந்தினி என்கிற நமது பெண் 600-க்கு 600 வாங்கியுள்ளார். 10 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் நாம் வாழ்ந்த கீழடி வரலாறு நமக்குக் கிடைத்துள்ளது. அதன் பிறகு நடந்தது என்ன? கடவுள் எங்கிருந்து குதித்து வந்தார்? மதத்தைக் கொண்டு வந்தது யார்? ஜாதியை உருவாக்கியவர் எவர்? இவை யனைத்தும் நம் தமிழ்ச் சமூகத்தை எப்படி பாழ் படுத்தியது?
இதுகுறித்தெல்லாம் சிந்தித்த காரணத்தினால் தான் கடவுள், மதம், ஜாதிகளை ஒழித்து, மனிதர்களை முன்னுக்கு கொண்டு வர பாடுபட்டார் பெரியார்! ஆக பெரியார் வந்தார், படிப்பு வந்தது. பெரியார் வந்தார், வேலை கிடைத்தது. பெரியார் வந்தார், முதலமைச்சர்கள் கிடைத்தார்கள், பெரியார் வந்தார் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்தார்கள், மொத் தத்தில் பெரியார் கிடைத்ததால், தமிழ்நாடே சிறப்பு பெற்று நிற்கிறது", என்று முனைவர் அதிரடி அன்பழகன் பேசினார். சமூக நீதி வரலாறு என்கிற தலைப்பில் மாலையில் ஒரு வகுப்பும் எடுத்தார்.
தொடர்ந்து பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை கள் எனும் தலைப்பில் பேராசிரியர் மு.சு.கண்மணி, சமூக ஊடகங்களில் நமது பங்கு எனும் தலைப்பில் பகுத்தறிவாளர்கழக ஊடகத்துறை மாநில தலைவர் மா.அழகிரிசாமி மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், அறிவியலும் மூட நம்பிக்கையும் எனும் தலைப்பில் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் பேசினர்.
நோக்கமும், தாக்கமும்!
வகுப்புகள் முடிந்த பிறகு நிறைவு விழா நடை பெற்றது. நிகழ்ச்சியின் நோக்கம், அதனால் மாணவர்கள் பெற்ற பயன்கள், நிகழ்வு நடைபெற பொறுப்பாளர்களின் அயராத உழைப்பு, அதற்காகும் பொருளாதாரப் பங் களிப்புகள், இக்கொள்கைகளை ஏற்றால் எதிர்காலத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கும் பெரும் நன்மைகள் குறித்துப் பெரியாரியல் பயிற்சி பட்டறையின் பொறுப் பாளரும், கழக மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.ஜெயக்குமார் பேசினார்.நிகழ்வில் கழகக் காப்பாளர் சாமி.திராவிடமணி, கழகப் பேச்சாளர் என்னாரெசு பிராட்லா, டார்வின் தமிழ் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக நிகழ்வில் மாவட்ட இணைச் செயலாளர் க.வீரையா அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ம.மாரிமுத்து தலைமையேற்க, காப்பாளர் பெ.இராவணன், மாவட்டச் செயலாளர் க.முத்து, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், பொதுக் குழு உறுப்பினர் த.சவுந்தரராசன் முன்னிலை ஏற்றனர். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தொடக்கவுரை ஆற்றினார். பேச்சாளர் மாங்காடு மணியரசன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சி சிறக்க துணை நின்றவர்கள்:
காப்பாளர் பெ.இராவணன், மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் க.முத்து, மாவட்ட இணைச் செயலாளர் க.வீரையா, அறந்தாங்கி நகர அமைப்பாளர் அ.வேல்சாமி, குப்பகுடி இரா.இளங்கோ, பனங்குளம் இரா.சவுந்தரராஜன், மாங்காடு சுப.மணியரசன், மாவட்ட ப.க. தலைவர் தங்க கண்ணன், இளைஞரணி ரெ.மணிமாறன், ஒன்றியத் தலைவர் மு.தேவேந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் ப.மகாராசா, மாவட்ட அமைப்பாளர் அ.தங்கராசு, மாங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகி செல்வ ராசன் ஆகியோர் நன்றிக்குரியவர்கள்!
பங்கேற்றமாணவச் செல்வங்கள்:
அருங்குழலி, சினேகா, பிரித்தி, பிரபாகரன், எழிலரசி, அரிஹரன், மகிழன், ஆதவன், கலைவாணி, ருத்திஷ், மூவரசன், மாதரசி, அழகேசன், யாழினியன், செம்மகிழன், தமிழ் தீரன், சாலினி, இனியவன், மதியரசன், கதிரவன், பரணிதரன், பண்பாளன், இள மாறன், யாழினி, சுபசிறீ, சுவானிகாசிறீ, ஈழநங்கை, சிறீராமபிரியா, லத்திகாசிறீ, வெற்றிராஜா, சிவரஞ்சனி, ஆதவன்.
No comments:
Post a Comment