ரஷ்யப் போர்- புது திருப்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

ரஷ்யப் போர்- புது திருப்பம்

மாஸ்கோ, ஜூன் 25 ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஆயுதக் குழுவான வாக்னர் ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியுள்ளது. போராளிகள் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்து வதாக வாக்னர் ஆயுதக் குழு அறிவித்துள்ளது. 

அதிபர் புதினின் மேனாள் கூட்டாளியும் வாக்னர் ஆயுதக் குழுவை நடத்துபவரான யெவ்ஜெனி பிரிகோ ஜின் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவில், "ரஷ்ய இரத்தம் சிந்தப்படும் அபாயம் இருப்பதால் போராளிகள் தளத்திற்குத் திரும்புவார்கள். கிளர்ச்சியாளர்களுக் கான பாதுகாப்பிற்கான உத்தரவாதம் பெலாரஷ்ய அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ அலுவலகம் மூலமாக கொடுக்கப்பட்டதால், ரஷ்யா முழுவ தும் வாக்னர் போராளிகளின் இயக் கத்தை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, போராளிகள் உக்ரைனில் தங்களின் கள முகாம்களுக்கு பின்வாங்க உத்தர விடப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் தி வாக்னர் குழுவுக்கு ரஷ்ய ராணுவ அமைச்சகம் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியது. அந்தக் குழுவில் சேரும் வீரர்கள் ராணுவ ஒப் பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை தொடங்கி பல கெடுபிடிகளை அடுக்கியது. ஆனால், இதற்கு ப்ரிகோஸின் எதிர்ப்பு தெரி விக்கலானார். இந்நிலையில்தான் உக் ரைனில் உள்ள தங்கள் படைகள் மீது ரஷ்ய ராணுவ ஏவுகணை தாக்குதல் நடத்தி 2000-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளதாக ப்ரிகோஸின் புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார். 

அதன் நீட்சியாக நேற்று (24.6.2023) காலை அவர் ஓரு ஒலிப்பதிவு எச்சரிக் கையை வெளியிட்டார். “நாங்கள் 25,000 பேர் இருக்கிறோம். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை எதிர்த்து முன்னேறுகிறோம். வழியில் எது தடை யாக இருந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம்” என்று எச்சரித் திருந்தார். ஏற்கெனவே உக்ரைன் போர் காரணமாக நெருக்கடியில் உள்ள ரஷ்யாவுக்கு இது இன்னொரு அழுத்த மாக சேர்ந்து கொள்ள உலகமே இந்த திருப்பத்தை உற்று நோக்கி வருகிறது. இதனிடையே, தொலைக்காட்சி உரை யில் பேசிய அதிபர் புதின், “வாக்னர் ஆயுதக் குழு முதுகில் குத்திவிட்டது. இது அப்பட்டமான துரோகம். நாட் டைக் காக்க போராடிக் கொண்டிருக் கும்போது தனிநபர் விருப்பங்களுக்காக ஆயுதம் ஏந்துவது தேசத் துரோகக் குற்றம். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனையை அனுப விக்க வேண்டும். கிரிமினல் குற்றச் சாட்டுக்கு உள்ளான தலைமையை பின்பற்றாமல் வீரர்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். மேலும், ‘தி வாக்னர்’ குழு ஒரு தீவிரவாதக் குழு என்றும் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்தார். 

இதற்கு பதிலடி தரும் வகையில் டெலிகிராமில் ஒரு ஒஒலிப்பதிவை வெளியிட்ட ப்ரிகோஸின், “தாய்நாட் டுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறுகிறார் அதிபர் புதின். அது ஓர் ஆழமான தவறு. நாங்கள் தாய்நாட்டின் பாதுகாவலர்கள். புதினின் வேண்டு கோளை எனது படை வீரர்கள் கேட்க மாட்டார்கள். 

ஏனெனில், எங்களுக்கு எங்களின் தேசம் ஊழல், சதி மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத் துவதில் சிக்கியிருப்பதில் விருப்ப மில்லை” என்று கூறியுள்ளார். அல் கொய்தா போன்ற ஆயுதக் குழுக்கள் வளர்த்து விட்டவர்களுக்கே நெருக்கடி யான கதையை இந்த உலக வரலாற்றில் உள்ளது. அப்படித்தான் இந்த வாக்னர் ஆயுதக் குழுவும் இன்று புதினுக்கு புதிய நெருக்கடியாக உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment