நாம்பென். ஜூன் 25 தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அங்கு அரசியல்வாதிகள் வாக் களிப்பதை கட்டாயமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதன்படி வாக்களிக்க தவறிய அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் நடை பெறும் தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும் பொது மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் அரசியல் கட்சியினருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்த சட் டத்திருத்தமானது அரசியல்வாதி களின் பொறுப்புகளை மேம்படுத்துவதற்கும், இடையூறு இல்லாத தேர்தலை உறுதி செய்வதற்கும் கொண்டு வரப்பட்டு உள்ளது என அந்த நாட்டின் துணைப் பிரதமர் சார் கெங் தெரிவித்தார். ஆனால் பொது மக்களுக்கு இந்த சட்டத் திருத்தம் பொருந்தாது எனவும், எதிர்கால தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் வாக்களிக்க செல்ல வேண்டும் எனவும் அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment