மதுரை, ஜூலை 29 - இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனமாகிய எல்&டி ஃபைனான்ஸ் ஹோல் டிங்ஸ் லிமிடெட், மதுரையில் தனது டிஜிட்டல் சகி திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்நிறுவனத்தின் முதன்மையான கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு திட்டமான ‘டிஜிட்டல் சகி’யின் மூலம் கிராமப் புறப் பெண்களுக்கு தொழில்முனைவு மற்றும் டிஜிட்டல் நிதி பரிவர்த்தனை குறித்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 2019-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டு 1 லட்சம் பேருக்கு டிஜிட்டல் நிதி உள்ளடக்குதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மதுரையில் 100-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சகிகளை - அதாவது டிஜிட்டல் இயக்க உதவியாளர்களை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகள், அரசாங்க உரிமைகள், உதவிகளுக்கான அணுகல், இலக்கு அடிப்படையிலான சேமிப்பு போன்றவற்றை அடைவதற்கு இவர்கள் உதவுவார்கள். கூடுதலாக, 600-க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோருக்கு குறுந்தொழில்களை நிறுவுதல் மற்றும் அளவிடுதல் ஆகியவற்றில் ஆதரவளிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் தினாநாத் துபாஷி கூறுகையில், “எங்களின் பல சில்லறை வணிகங்கள் கிராமப்புற சமூகங்களுடன் நேரடியாக ஈடுபடுவதால், சமூகத்தில் இருக்கும் இடைவெளிகள் உட்பட வாடிக்கையாளர்களின் தேவைகள் அனைத்தை யும் உள்ளடக்கிய பார்வையை எங்களுக்கு வழங்குகிறது. டிஜிட்டல் நிதி உள்ளடக்குதலை ஊக்குவித்தல், பெண் களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்திற்கு உத்வேகம் அளிப்பதன் மூலம் தாங்கள் செயல்படும் கிரா மப்புற சமூகங்களை மேம்படுத்த எங்கள் டிஜிட்டல் சகிகள் திறம்பட உதவியுள்ளனர். இதன் மூலம் நாட்டின் அடித்தட்டு நிலை வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாட்டின் வளர்ச்சி செயல்திட்டத்தையும் இது ஊக்குவிக்கிறது” என்றார்.
No comments:
Post a Comment