புதுடில்லி, ஜூன் 28 - ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு ஆங்கில பத்திரிகையில் கட் டுரை எழுதி இருந்தார். அதில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு குறைவாக இருப் பதாக கூறியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் விவாதிப் பதற்கு பதிலாக, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து முட்டுக் கட்டை போடுவதிலேயே கவன மாக இருப்பதாகவும், 15-க்கு மேற் பட்ட வழக்குகளில் தீவிரமாக வாதாடியும் எதிர்க்கட்சிகளுக்கு தோல்வியே கிடைத்ததாகவும் அவர் கூறியிருந்தார். அதற்கு மேனாள் ஒன் றிய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்ப தாவது:-
மோடி அரசின் சாதனைகள் குறித்து ஒன்றிய அமைச்சர் நிர் மலா சீதாராமன் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அவர் சுட்டிக் காட்டிய பல நிகழ்வுகள் உண்மை தான். 5 அல்லது 10 ஆண்டுகள் ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் அதை செய்திருக்கும் என்பதுதான் உண்மை. மோடி அரசை எதிர்க் கட்சிகள் நீதிமன்றத்திற்கு இழுத்து, தோல்வி அடைந்ததாக 5 வழக்கு களை நிர்மலா சீதாராமன் சுட்டிக் காட்டி இருக்கிறார். அவற்றில் 3 வழக்குகளை பற்றி அவர் சொன் னது தவறு.
உதாரணமாக, 'முத்தலாக்' தடைக்காக நாடாளுமன்றம் சட் டம் இயற்றுவதற்கு முன்பே, முத்தலாக் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட் டது. காஷ்மீர் சிறப்பு தகுதி தொடர்பான 370ஆ-வது பிரிவு பற்றிய வழக்கு, இன்னும் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை.
ஜி.எஸ்.டி. தொடர்பான பல் வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பால், தேன், பழங் கள், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்தியில் இந்தியா முன்னணி யில் இருப்பதாக நிதி அமைச்சர் கூறியிருக்கிறார். அந்த முன்னணி இடம், பல ஆண்டுகளுக்கு முன்பே பெற்றது. அதைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளோம்.
வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்துவதையும் சாத னைப் பட்டியலில் நிதி அமைச்சர் சேர்த்துள்ளார். ஆதார் திட் டத்தை கருவாக்கி, உருவாக்கி, அமல்படுத்தியது காங்கிரஸ் தலை மையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்பதை அவர் மறந்து விட்டார்.
முதல்முறையாக வங்கிக்கணக் கில் நேரடியாக பணம் செலுத்தி யதும் அய்க்கிய முற்போக்கு கூட் டணி அரசுதான். 11 கோடியே 72 லட்சம் கழிப்பறைகள் கட்டியதாக நிதி அமைச்சர் பெருமை பேசு கிறார். அவற்றில் எத்தனை கழிப் பறைகள் தண்ணீர் இல்லாமல் பயன்படுத்தாமலும், பயன்படுத்த முடியாமலும் இருக்கின்றன என் பது பற்றிய தனது அரசின் அறிக் கைகளை அவர் படிக்க வேண்டும்.
எல்லா அரசும் தனக்கென சாதனை பட்டியல் வைத்திருப்பது போலவே மோடி அரசும் வைத்தி ருக்கிறது. சில துறைகளில் மோடி அரசு முன்னணியில் இருக்கிறது என்றால், அது அய்க்கிய முற் போக்கு கூட்டணி அரசின் அடித் தளத்தில் இந்த அரசு நிற்பதே காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment