மழை
மேற்குத் திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (6.6.2023) முதல் 4 நாள்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
முதலிடம்
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில், சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை சென்னை அய்.அய்.டி.யும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3ஆவது இடத்தை சென்னை மாநிலக் கல்லூரியும் மீண்டும் தக்க வைத்துள்ளன.
பேச்சு வார்த்தை
தமிழ்நாடு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
வாய்ப்பு
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கு வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வரும் 8ஆம் தேதிக்கு முன் மழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
உத்தரவு
ஒடிசா செல்லும் விமானங்களில் பயணிகளிடம் நியா யமான கட்டணத்தை விமான நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
மீட்பு
உச்சநீதிமன்ற உத்தரவின்படி சென்னை ராதாகிருஷ் ணன் சாலையில் உள்ள செம்மொழி பூங்கா எதிரே உள்ள ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துகளை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல்.
உதவி மய்யம்
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதி ரான வன்கொடுமைகள் குறித்து புகார் அளிக்க, “உதவி மய்யம்“ இம்மாதம் இறுதியில் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
No comments:
Post a Comment