பிஜேபி - ஆர்.எஸ்.எஸ்.அய் தெரிந்து கொள்வீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 11, 2023

பிஜேபி - ஆர்.எஸ்.எஸ்.அய் தெரிந்து கொள்வீர்!

காந்தியாரைப் படுகொலை செய்த கோட்சே இந்தியாவின் மதிப்புமிகு புதல்வனாம்: ஒன்றிய பிஜேபி அமைச்சர் புகழாரம்

தாண்டேவாடா, ஜூன் 11- மராட்டிய மாநிலத்தின் சில நகரங்களில் சமீபத்தில் நடந்த வன் முறை தொடர்பாக அந்த மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், ‘மாநிலத்தில் திடீ ரென அவுரங்கசீப்பின் வாரிசுகள் பிறப்பெடுத்துள்ளனர்’ என்று கருத்து கூறினார்.

அதற்கு, ‘அவர்கள் கோட்சே யின் (காந்தி கொலையாளி) வாரிசுகள்’ என்று ஏ.அய்.எம்.அய்.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சத்தீஷ்கார் மாநிலத்தின் தாண்டேவாடா நக ருக்கு சென்ற ஒன்றிய ஊரக மேம் பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியா ளர்களிடம் பேசினார்.

அப்போது அவரிடம், ஓவைசி யின் கருத்து பற்றி கேட்கப்பட்டது. அதற்கு கிரிராஜ் சிங், ‘நாதுராம் கோட்சே காந்தியாரைக் கொன் றவர் என்றால், அவர் இந்தியாவின் மதிப்பு மிக்க மகனும்தான். கோட்சே இந்தியாவில் பிறந்தவர். மொகலாய மன்னர்கள் பாபர், அவுரங்கசீப் போல இங்கு படை யெடுத்து வந்தவர் அல்ல’ என்றார்.

No comments:

Post a Comment