பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் இராமச்சந்திரன் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 29, 2023

பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் இராமச்சந்திரன் மறைவு

பெருமளவில் திரண்டு இறுதி மரியாதை செலுத்திய கழகப்பொறுப்பாளர்கள்

கோவை, ஜூன் 29- கோவையில் ஜூன் 24ஆம் தேதி பெரியார் பெருந் தொண்டர் வசந்தம் கு.இராமச் சந்திரன் (வயது 98) அவர்கள் மறை வுற்றார்

மறைந்த பெரியார் பெருந் தொண்டர் வசந்தம் கு. இராமச் சந்திரன் அவர்களின் உடல் பீள மேடு அருகில் உள்ள பேரன் வசந்த் இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டு உடல் மீது திரா விடர் கழக கொடி அணிவிக்கப் பட்டு இருந்தது.

அங்கு ஏராளமானோர் வருகை தந்து அய்யாவின் உடலுக்கு மரி யாதை செலுத்தினர். தொடர்ந்து அங்கே  வீரவணக்கம் கூட்டமும் நடைபெற்றது. பெரியார் பெருந் தொண்டர் பொத்தனூர் சண் முகம், பேராசிரியர் காளிமுத்து, தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், மேட்டுப் பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, கோவை மாநகர தலைவர் ம.சந்திரசேகர், பொதுக் குழு உறுப்பினர் பழ அன்பரசு, பக கோபி குமாரராஜா, பக ஆனந்த ராஜ், நிர்மல், உள்ளிட்ட ஏராள மானோர் வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினர்.

தொடர்ந்து உரையாற்றிய கோவை மாவட்ட செயலாளர் க.வீரமணி, வசந்தம் இராமச்சந் திரன் மறைவுக்கு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையை வாசித் துக்காட்டினார்.

தொடர்ந்து கோவை மாவட்ட திராவிடர் கழக தலைவராக தொடர்ந்து 38 ஆண்டுகள், கோவை மர வியா பாரிகள் சங்கத் தலைவராக, தென்னிந்திய நூற் பாலைகள் சங்கத் துணைத் தலை வராக, கோவை சுழற்சங்க செயலாள ராக , இப்படி எண்ணற்ற பொறுப்பு களில் மிக சிறப்பாக பணியாற்றி அனைவரின் அன்பை யும் பெற்றவர். திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மீது அளவற்ற பற்றும் பாசமும் கொண்டவர்.

பெரியாரின் தொண்டராக, கழக காப்பாளராக, கட்டுப்பாடு மிக்க கழக தோழர்களின் பாதுகா வலராக அனைவருக்கும் வழிகாட் டியாக நிறை வாழ்வு வாழ்ந்து மறைந்த வசந்தம் இராமச்சந்திரன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் எந்த வித மூடநம்பிக்கை சடங்கு களும் இல்லாமல் நடைபெற்றது கழக தோழர்களின் உணர்ச்சி மிக்க பெரியார் தொண்டருக்கு வீர வணக்கம், ஜாதி ஒழிப்புக் போரா ளிக்கு வீரவணக்கம், சமூக நீதி போராளிக்கு வீரவணக்கம் என்ற முழக்கத்துடன் கழக மகளிரணி தோழியர்கள் கலைச்செல்வி, கவிதா, முத்துமணி, கல்பனா உள்ளிட்ட பெண்களே முன்வந்து அய்யாவின் உடலை சுமந்து கொண்டு இறுதி ஊர்வலம் செல் லும் வாகனம் வரை வந்தனர். 

தொடர்ந்து திராவிடர் கழக தோழர்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து தொடர்ந்து வர  இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கொடை

அய்யாவின் விருப்பப்படியே கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டுக்காக அய்யாவின் உடல் கொடையாக மருத்துவ அதிகாரி செ குனசேகர னிடம் வழங்கப்பட்டது அய்யா வின் உடலைப் பெற்றுக் கொண்டு அதற்கு உரிய சான்றிதழையும் வழங்கினார் 

அப்போது வசந்தம் கு.இரா மச்சந்திரன் அவர்களின் துணை வியார் ரா.ரங்கநாயகி, பேரன் வசந்த் மற்றும் மகன் ரா.தாமோ தரன், தனலட்சுமி, மகள்கள் இந் திராணி, ஜெகதீசன்,ஜெயமணி, ராதா, ராஜன் உள்ளிட்ட பேரன் கள் பேத்திகள் உற்றார் உறவினர் கள் மற்றும் திராவிடர் கழக மாநில வழக்குரைஞரணி தலைவர் வழக் குரைஞர் த. வீரசேகரன், மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், பக மாநில பொறுப்பாளர் தரும.வீரமணி, கோவை மாவட்ட அமைப்பாளர் மு. தமிழ்செல்வம், மாநகர அமைப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட துணை செயலாளர் திக காளிமுத்து, விடு தலை வாசகர் வட்டம் கு.வெ.கி செந்தில், பக மாவட்ட செயலாளர் அக்ரிநாகராஜ் , முருகானந்தம், ஆட்டோ சக்தி, ஈரோடு மாவட்டகழக தலைவர் நற்குணன், கோபி மாவட்ட கழக செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன், பொத்தனூர் சன்முகம் அய்யாவின் மருமகள் சாந்தி, பரமத்தி வேலூர் நகர செயலாளர் அசைன், மற்றும் ராசுசேகரன், பொதுக்குழு உறுப் பினர் திலகவதி, மேட்டுப்பாளையம் ச.ராஜேஸ்வரி, பொள்ளாச்சி மாவட்ட கழக தலைவர் மாரிமுத்து ,செயலாளர் ரவிச்சந்திரன், பொறி யாளர் தி.பரமசிவம், வீரமலை, சிவராஜ், திமுக வழக்குரைஞர் சுப்பிரமணி,  திருப்பூர் மாவட்ட கழக தலைவர் யாழ் ஆறுச்சாமி, செயலாளர் குமரவேல், மேட்டுப் பாளையம் கழக செயலாளர் கா.சு.ரங்கசாமி , நகரச் செயலாளர் சந்திரன், மே.ப.ரங்கசாமி, தொழி லாளர் அணி தலைவர் வெங்கடா சலம், பொருளாளர் முத்துமாலை யப்பான், தெற்கு பகுதி செயலாளர் தெ.குமரேசன். கிழக்கு பகுதி செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, எட்டி மடை மருதமுத்து, தோழர் தமிழ்முரசு, பெயிண்டர் குமார், பொன்ராஜ், அ.மு.ராஜா உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

No comments:

Post a Comment