6.6.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*தொகுதி மறு வரைவு கொள்கை முன்னேற்றம் அடையாத மாநிலங்களுக்கு அதிக தொகுதிகளை தரும் வகையில் உள்ளது. தற்போது உள்ள மக்களவை தொகுதிகளை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் மோகன் குருசாமி.
* காலியாக உள்ள மூன்று லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் மோடி அரசுக்கு கோரிக்கை.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* காரின் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு மோடி இந்திய காரை ஓட்டுகிறார். ஆகவே விபத்துக்கள் நேரிடுகின்றன என அமெரிக்காவில் ராகுல் கிண்டல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கருநாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், அவற்றைத் தடை செய்ய காங்கிரஸ் உறுதி பூண்டது. பெரும்பாலும் சங்பரிவார் அங்கம் வகிக்கும் இந்து விழிப்புணர்வின் பங்கு அதிகரித்து வரும் நிலையில் இந்த வாக்குறுதி மிகவும் முக்கியமானது என்கிறார் பேராசிரியர் கிறிஸ்டபர் ஜாப்ரலெட்
தி டெலிகிராப்:
* ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிழக்கு சிங்பூம், மேற்கு சிங்பூம் மற்றும் செரைகேலா-கர்சவான் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 150 உறுப்பினர்கள் ஒன்று கூடி பாஜக அல்லாத ஜார்க்கண்ட் உருவாக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
* சிபிஅய் என்பது குற்றங்களை விசாரிப்பதே தவிர, ரயில் விபத்துகளை அல்ல என பிரதமர் நரேந்திர மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment