செந்துறை, ஜூன் 1 அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் வீராக்கன் கிராமத்தில் திராவிடன் துணிக்கடை அறிவு மிட்டாய் கடை திறப்பு விழா 28.5.2023 அன்று நண்பகல் 12.30 மணியளவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் விடுதலை நீல மேகன் தலைமையேற்க, மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் சு.அறி வன் வரவேற்புரையாற்றினார்.மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன், கழக காப்பாளர் சு.மணி வண்ணன், மாவட்ட அமைப்பாளர் இரத்தின. இராமச்சந்திரன் ஆகி யோர் முன் னிலை வகித்தனர். மாநில மாணவர் கழக செயலாளர் இரா. செந்தூரப் பாண்டியன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந் திரையன் ஆகியோரின் வாழ்த் துரைக்குப் பின்னர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் வாழ்வியல் உரை யாற்றி திராவிடன் துணிக்கடை அறிவு மிட்டாய் கடைகளை திறந்து வைத்தார்.
அவர் தமது உரையில் மாணவப் பருவந் தொட்டு கழகக் கொள் கைப்பற்றோடு இயங்கக்கூடிய அறிவன் தனக்கும், தன் கிராமத் திற்கும் பயன்படும் வகையில் இந்தக் கடைகளை திறந்துள்ளார். பெரியார்கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளவர்கள் வாழ்க்கை யில் சிறப்பாக முன்னேறுவார்கள். காரணம் எந்த ஒரு செயலையும் காரணகாரியங்களை ஆராய்ந்து செயல்படுவது பெரியார் தொண் டர்களின் சிறப்பு. அவர்கள் மூட நம்பிக்கைகளை முறியடிப்பவர்கள். ‘பண்டிகை’களில் பணத்தை இழக் காதவர்கள் சிக்கனமாகவும் சேமிக் கவும் கற்றுக்கொண்டால் வாழ்வில் உயரலாம் என்று விளக்கி சிறப் புரையாற்றினார். முதல் விற்ப னையை பொதுக்குழு உறுப் பினர் சி.காமராஜ் துவக்கி வைத்தார். தோழர்களும், உறவினர்களும் பெற்றுக்கொண்டனர்.
சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் திராவிடச் செல் வன் நன்றி கூறினார்.
மாவட்டத் துணைச் செயலா ளர் மா.சங்கர், மாவட்ட தொழிலா ளரணி தலைவர் தா.மதியழகன், செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ்செல்வன், செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா செல்வ குமார், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் திராவிட வித்து, மாவட்ட இளைஞரணி செயலா ளர் லெ.தமிழரசன், சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் இன்பத் தமிழன், அஜீத், சுரேஷ், பெரியாக் குறிச்சி சோ.க.சேகர், பிரபாகரன் உள்ளிட்ட ஏராள மான தோழர்களும், நண்பர்களும் உற வினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment