அரியலூர்,ஜூன்4- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் தத்தனூர் பொட்டக் கொல்லை கிராமத்தைச் சார்ந்த ஜாதி ஒழிப்பு மாவீரர் துரைக் கண்ணு அவர்கள் 1.6.2023 வியா ழன் அன்று காலை வயதுமுதிர்வின் காரணமாக (வயது 91)இயற்கை எய்தினார்.
அவரது மறைவு செய்தியறிந்த அரியலூர் மாவட்ட பொறுப் பாளர்களும் தோழர்களும் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திர சேகரன் தலைமையில் மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் சி.காம ராஜ், கழக காப்பாளர் சு.மணி வண்ணன், மாநில இ.அ.து.செய லாளர் சு.அறிவன் ஆகியோர் முன்னிலையில் தத்தனூர் கிராமத் திற்கு சென்று அய்யாவின் உட லுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செய்தனர்.
துரைக்கண்ணு அவர்கள் ஜாதி ஒழிப்பிற்காக தந்தைப் பெரியாரின் கட்டளை ஏற்று அரசியல் சட் டத்தை எரித்து 18 மாதங்கள் சிறை தண்டனைப் பெற்றவர். கடைசி வரை உறுதியான கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தவர். பெரியார் கருத்துகளையும் திருக்குறளையும் சித்தர் பாடல்களையும் தன்னை சந்திக்க வருபவர்களிடம் விளக்கி கூறுவார்.
இறப்பதற்கு முன் அவரின் உறவினர்களிடம் நான் இறந்தால் எனது கட்சிக்காரர்களிடம் தகவல் கொடுக்க வேண்டும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப இறுதி நிகழ்ச் சிகள் நடைபெற வேண்டும். எந்த விதமான மூடச் சடங்குகளும் பின்பற்றக் கூடாது என்று உறு தியைப் பெற்றாராம். கடந்த 26.11.2022 ஜாதி ஒழிப்பு மாவீரர் நாளில் அரியலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவரை சந்தித்து நலம் விசாரித் ததும் சிறப்பு செய்ததும் குறிப்பிடத் தக்கது. இரவு 7 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் தோழர் களின் வீர முழக்கத்தோடு நடை பெற்று உடல் எரியூட்டப்பட்டது.
பங்கேற்றோர்
மாவட்ட அமைப்பாளர் ரத் தின. இராமச்சந்திரன் மாவட்ட துணை தலைவர் இரா. திலீபன் மாவட்ட துணைச் செயலாளர் மா.சங்கர் மாவட்டத் துணைச் செயலாளர் பொன் செந்தில் குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் க.கார்த்திக் மாவட்ட இளைஞரணி செயலாளர் லெ. தமிழரசன், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன் ஒன்றிய செயலாளர் ராசா. செல் வக்குமார் ஒன்றிய அமைப்பாளர் சுப்பராயன் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆ.இள வழகன் மாவட்ட ப.க ஆசிரியரணி அமைப்பாளர் இரா ராஜேந்திரன் அரியலூர் ஒன்றிய செயலாளர் மு கோபாலகிருஷ்ணன் ஆண்டி மடம் ஒன்றிய தலைவர் இரா. தமி ழரசன் தா.பழூர் ஒன்றிய செய லாளர் பி.வெங்கடாசலம், அமைப் பாளர் சி. தமிழ் சேகரன், மாவட்ட இ.அ.து. தலைவர் திராவிட வித்து, பெரியார் திடல் வை. கலை யரசன், வடலூர் இந்திரசித்து, மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் மு.ராஜா வாழும் சட்ட எரிப்பு வீரர்தத் தனூர் ராமசாமி. உல்லியக்குடி சிற்றரசு, சங்கர் அப்பாசாமி, விளாங்குடி வி.ஜி.மணிகண்டன், விஜய் உள் ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும், உறவினர்களும் நண்பர்களும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment