ஆட்டிப்படைக்கும் மூடநம்பிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 11, 2023

ஆட்டிப்படைக்கும் மூடநம்பிக்கை

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்திருந்த பள்ளிக் கட்டடம் இடிப்பாம்!

பாலசோர்,ஜூன்11 - ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் களை வைத்திருந்த பள்ளிக்கு செல்ல மாணவர்களிடையே திணிக்கப் பட்ட மூடநம்பிக்கையால், அந்த பள்ளிக் கட்டடங்களை இடிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, இறந்தவர்களின் உடலை அடை யாளம் கண்டு அவர்களது உறவி னர்களிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இருப்பினும், சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததால் அவர் கள் யார் என அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வந்தது. 

இந்த ஒடிசா ரயில் விபத்தில் இறந்த சிலரது உடல்கள் அடை யாளம் காணப்படுவதற்காக பால சோர் மாவட்டத்தில் உள்ள பகநாஹா உயர்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது.

இறந்த உடல்களை வைக்கப்பட் டிருந்த பள்ளி என்பதால் மாண வர்கள் மீண்டும் அந்தப் பள்ளிக்கு செல்வதை நினைத்து பயந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பள்ளி மேலாண்மைக் குழுவின் மேற்பார்வையில் அந்த பள்ளிக் கட்டடத்தினை இடிக்க முடிவு செய்யப்பட்டதாம். 

மாணவர், பெற்றோரிடையே அச்சத்தைப் போக்கி, மூடநம்பிக் கைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வராத அம்மாநில அரசு, மூடநம்பிக்கைக்குத் துணை போகும் வகையில் பள்ளியின் கட்டடத்தை இடிக்கிறதாம். வகுப் பறைகளின் மேற்கூரைகளில் அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளை அகற்றி உள்ளனர். 

அந்த பள்ளியில் 567 மாண வர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.  ஜூன் 2-ஆம் தேதியில் ஏற்பட்ட இந்த கோர ரயில் விபத்தால் 288 பேர் உயிரிழந்தனர். இந்த ரயில் விபத்து நடந்த இடத்தில் இருந்து இந்த பள்ளியானது 100 மீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment