சென்னை, ஜூன் 11- மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் 9.6.2023 அன்று பீகாரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “நாது ராம் கோட்சே இந்தியாவின் மரியா தைக்குரிய நபர்; அவர் பாபர், அவுரங் கசீப் போன்ற முகலாயர்கள் போல் படையெடுத்து வந்தவர் அல்ல. ஆகை யால் தங்களை பாபர், அவுரங்கசீப் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள் பவர்கள் நிச்சயமாக பாரத அன்னையின் மகனாக இருக்க முடியாது,” என்று கூறி இருக்கிறார்.
பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே ஹிந்துத்துவ சனாதன சக்திகள் காந்தியாரைக் கொன்ற கோட்சே மற்றும் கொலைக்கு உடந் தையாக இருந்த சாவர்க்கர் போன் றோரை புகழ்ந்து பேசுவது கடும் கண்ட னத்துக்கு உரியது.
காந்தியாரைக் கொன்ற கோட் சேயைப் புகழ்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
-இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment