ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் புதிய தோழர்களுக்கென பயிற்சி முகாம் சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 11, 2023

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் புதிய தோழர்களுக்கென பயிற்சி முகாம் சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

சோழிங்கநல்லூர், ஜூன் 11  கடந்த 3.6.2023 அன்று மாலை 5 மணிக்கு, விடுதலை நகர், சுண்ணாம்புக் கொளத்தூரில் (சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர் ஆனந்தன் அவர்களது  அலுவலகம்) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் தலைமையில் 27.05.2023 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற சென்னை மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை நடை முறைப் படுத்துவதற்காகவும், கழகத் தோழர்களின் ஒத் துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் பற்றிய தங் களின் மேலான கருத்துகளை பகிர்ந்து கொள்வதற் காகவும், ஆர்.டி..வீரபத்திரன், சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர் அவர்களின் தலை மையில்,  ஆ.விஜய் உத்தமன் ராஜ், சோழிங்க நல்லூர் மாவட்ட  செயலாளர் வரவேற்புரையாற்ற, நித்தியானந்தம் சோழிங்க நல்லூர் மா.இளைஞரணி தலைவர், கே.தமிழரசன் மேடவாக்கம், மா. இளைஞரணி செயலாளர், இரா.சிவசாமி சென்னை மண்டல கழக இ.அ.செயலாளர், வேலூர் பாண்டு, மா. கழக துணை செயலாளர் ஆகியோர் முன் னிலை வகிக்க சிறப்புக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கலந்து கொண்ட தோழர்களின் கருத்துகளை ஏற்று சிறப்பான ஏழு தீர்மானங்கள் நிறை வேற்றப் பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) மாவட்ட துணைத் தலைவராக வேலூர் பாண்டு அவர்களை முன்மொழிந்து, வழிமொழியப் பட்டது.

2) மாவட்ட துணைச் செயலாளராக நங்கநல்லூர் தமிழினியன் அவர்களை முன்மொழிந்து, வழி மொழியப்பட்டது.

3) மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், மாதந்தோறும் ஒவ்வொரு கிளைகளிலும் தெருமுனைக் கூட்டம் நடத்துவது.

4)  கழகக் கிளைகள் இல்லாத கிராமங்களில் கிளைகள் தொடங்கி புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது.

5) மாவட்ட கிளைகள்தோறும் கழகக் கொடி ஏற்றி, செடிகள் நடுவது.

6) கழகத் தோழர்கள் முடிந்தவரையில் அவர வர் வீட்டிற்கு முன்பாக தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் கருத்துகளோடு கூடிய கருத்துப் பலகை அமைப்பது.

7) கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களோடு ளிவிஸி-இல் மிஜி பணியாளர்களிடையே பகுத்தறிவுக் கருத்து களை கொண்டுசேர்ப்பது, அவர்களுக்கென சிறப்பாக ஆங்கிலத்தில் கருத்தரங்கு, மற்றும் முகாம் நடத்துவது,

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாணவர்கள், இளைஞர்கள், மற்றும் புதிய தோழர்களுக்கென பயிற்சி முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

கலந்துரையாடலில் மாவட்ட தலைவர் உள்ளிட்ட கீழ்க்காணும் தோழர்கள் கலந்துகொண் டனர். ஆர்.டி.வீரபத்திரன், விஜய் உத்தமன்ராஜ், வேலூர் பாண்டு, நித்தியானந்தம், பி.சி.ஜெயராம், தமிழினியன், மணிகண்டன், தமிழரசன், தேவி சக்திவேல், அனுஷா, ராஜேந்திரன்.

No comments:

Post a Comment