புதுடில்லி, ஜூன் 26 மணிப்பூரில் உள் நாட்டுக் கலவரம் மதக்கலவரமாக மாறி கடந்த ஒன்றரை மாதங்களாக ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்தும், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், எதிர்க் கட்சி களின் தொடர் அழுத்தத்தின் விளைவாக ஒன்றிய பா.ஜ.க அரசு தனது குரூரமான கள்ள மவுனத்தைக் கலைக்கும் விதமாக அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மணிப்பூர் மாநிலத்தின் மூத்த தலைவர் ஒக்ரம் இபோபி சிங் கலந்து கொண்டார். 15 ஆண்டுகள் மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அவ ருக்கு இக்கூட்டத்தில் பேச 6-_7 நிமிடங்கள் மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. "திரு அமித்ஷா எனக்குப் பேச கூடுதலாக ஒரு 5 நிமிடமாவது கொடுங்கள். அல்லது மூன்று நிமிடங்களாவது கொடுங்கள்" என்று அவர் மன்றாடியும், அவருக்கு நேரம் மறுக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் அந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றவர் களிலேயே மணிப்பூரை பூர்வீகமாகக் கொண்டவர் இவர் ஒருவர் மட்டும்தான்.! அப்படியிருந்தும் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை அக்கூட்டத்தின் லட்சணத்தை எடுத்துக்காட்டுகிறது.
இப்படி ஒரு பதற்றமான சூழலில் ஆளும் தரப்பில் மணிப்பூர் மக்களின் அர சியல் பிரதிநிதிகள் இல்லாமல் ஒருஅனைத் துக் கட்சி கூட்டத்தை நடத்துவது ஆண வத்தின் உச்சம் என்றால், அக்கூட்டத்தில் அந்த மக்களின் சார்பாக பங்கேற்ற ஒற்றை பிரதிநிதிக்கும் பேசுவதற்கு உரிய நேரம் வழங்காமல் அவமதிப்பது அதைவிட மோசமானது தேசிய இனங்களின் உணர்வு களை ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பாசிச ஒன்றிய அரசு எவ்வளவு துச்சமாக மதிக்கிறது, அவர்களின் கருத்துக்களை எவ்வாறு காலில் போட்டு மிதிக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு முக்கியமான சான்று.
No comments:
Post a Comment