ஜாதி ஒழிப்புக்காக அர சியல் சட்டத்தை எரித்து 18 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்த மாவீரர் அரிய லூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் ஒன்றியம் தத்தனூர் துரைக்கண்ணு (வயது 91) இன்று (1.6.2023) காலை இயற்கை எய்தினார்.
அவரது இறுதி நிகழ்ச்சிகளை கழகத்தோழர்கள் தான் செய்ய வேண்டும் என்று அவர் குடும்பத்தின ரிடம் உறுதியை பெற்றுள்ளார்.
இன்று (1.6.2023) மாலை தத்தனூர் கடைவீதியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு, இறுதி நிகழ்வு நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் முன்னிலையில் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் திரண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
கடந்த 26. 11.2022 அன்று ஜாதி ஒழிப்பு மாவீரர் நாளில் அவருக்கு அரியலூர் மாவட்ட கழகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment