சென்னை, ஜூன் 23 - நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண் (ரேண்டம்) வழங்கும் போது, பத்தாம் வகுப்பு மதிப் பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.
பொறியியல் சேர்க்கைக்கான இணைய விண்ணப்ப பதிவு மே 5 ஆம் தேதி தொடங்கி ஜூன் 4 ஆம் தேதி நிறைவடைந்தது. பொறியியல் படிப் பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண்கள் (ரேண்டம்) வழங்கப்படும். அதன்பின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். ஒரே கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று இருந்தால் அவர்கள் பெற்ற மதிப்பெண் பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த நிலையில் 2023--2024ஆம் கல் வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் போது பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைக் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து, மாணவர் சேர்க் கைக்கான விதியில் திருத்தம் செய்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை அர சாணை வெளியிடப்பட்டுள்ளது.
2021--2022ஆம் கல்வியாண்டில் கரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத் தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் சான்றிதழ்கள் வெளியிடப்பட்டதால் நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சம வாய்ப்பு எண் வழங்கும் போது, பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment