1959 ஆண்டில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கபினி அணை 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டுவதற்கு ஒப்புதல் பெற்று 25 கோடி ரூபாய் செலவில் பெரிய அணையாக கட்டும் திட்டத்தைத் தொடங்கி 1978 - 1979இல் கட்டி முடித்தது.
1964ஆம் ஆண்டு கட்டுவதற்கு தொடங்கப்பட்ட ஹேரங்கி அணை 1979 - 1980 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
1965ஆம் ஆண்டில் சொர்ணவதி அணை கட்டத் தொடங்கப்பட்டு 1984ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப் பட்டது.
1968ஆம் ஆண்டில் ஹேமாவதி அணை கட்டத் தொடங்கப்பட்டு 1979 - 1980இல் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த அணைகளை எல்லாம் ஒன்றிய அரசிடமோ, தமிழ்நாடு அர சிடமோ, ஒன்றிய நீர் மற்றும் மின் சக்தி துறையிடமோ அனுமதி எதுவும் பெறாமல் கட்டத் தொடங்கியதால்தான் 1967 கழக ஆட்சி மலர்ந்த பிறகு கரு நாடகா அணைகட்டும் திட்டங்களை எதிர்த்து ஒன்றிய அரசிடம் முறை யிட்டு; பலமுறை கருநாடக அரசிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் முடிவு காண முடியாததால் நடுவர் மன் றத்தை அமைக்கக் கோரி, நீதி மன்றங்களின் வாயிலாக நடுவர் மன் றம் அமைத்து, இடைக்கால ஆணை, இறுதி ஆணை பின் உச்சநீதிமன்ற ஆணை எனப் பெற்றும் கருநாடகம் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது.
No comments:
Post a Comment