தமிழ்நாட்டில் மாவட்ட உரிமையியல் நீதிபதி பதவி களுக்கான தேர்வு நடத்தி 245 பதவிகளை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (TNPSC) 1 1.6.2023 அன்று விளம்பரம் வெளியிட்டது. இந்த ஆண்டு சட்டப்படிப்பு முடித்து சான்றிதழ் பெற்றுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் (விளம்பரம் எண்:661, தேதி 1.6.2023 - பகுதி 4(பி) என்கிறது விளம் பரம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.6.2023.
இந்த ஆண்டு சட்டப் படிப்பினை அம்பேத்கர் சட்டக் கல்லூரி உள்ளிட்ட அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஜூன் 20 தேதிகளில் தான் தேர்வை எழுதி முடித்துள்ளார்கள். தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதியில் வரக்கூடும். இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும் பாலும் கிராமப்புற, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள். இன்னும் தேர்வு முடிவு வராத நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள விளம்பரத்தின் அடிப்படையில் 245 மாவட்ட உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கு அவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இந்த ஆண்டு சட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு, தேர்வுகள் உடன் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டது. அவர்கள் அனைவரும் 245 மாவட்ட உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அதில் படிக்கும் மாணவர்கள் மிகவும் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆனால், அரசுக் கல்லூரிகளில் படிக்கும் எளிய குடும் பத்து பிள்ளைகளுக்கு தேர்வு உரிய நேரத்தில் நடத்தாததால், அவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடிய வில்லை.
தற்போது இந்த வாய்ப்பை இந்த மாணவர்கள் இழந்தால், மீண்டும் இதே போன்ற மாவட்ட உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கு விண்ணப்பிக்க அய்ந்து அல்லது ஆறு ஆண்டுகள் காத்திருக்கும் நிலைமை ஏற்படும்.
ஆகவே, விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30.6.2023-க்கு பதிலாக 31.08.2023 என்று இரண்டு மாதங்கள் தள்ளி வைத்தால், அரசுக் கல்லூரிகளில் படித்த மாணவர்களும் விண்ணப்பித்து தேர்வு எழுத வாய்ப்பு கிடைக்கும்.
சமூக நீதியின் அடிப்படையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், சட்டத்துறை அமைச்சர் அவர் களும் மாவட்ட உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கு விண் ணப்பிக்கும் கடைசி நாளை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்திட, டி.என்.பி.எஸ்.சி.க்கு அறிவுறுத்த வேண்டுகிறோம்.
-கோ.கருணாநிதி
பொதுச் செயலாளர்
அ.இ.பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment