கருநாடக பி.ஜே.பி. ஆட்சியின் கல்வித் துறையில் முறைகேடுகள் அம்பலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 7, 2023

கருநாடக பி.ஜே.பி. ஆட்சியின் கல்வித் துறையில் முறைகேடுகள் அம்பலம்

பெங்களூரு, ஜூன் 7- பெங்க ளூரு உள்ளிட்ட மாநகராட்சி யின் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளில் பணியாற் றும் தகுதியில்லாத ஆசிரியர் களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக ஆணையர் துஷார் கிரிநாத் தெரிவித்துள் ளார்.

பெங்களூரு மாநகராட்சி தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் கூறியதாவது: 

பெங்களூரு மாநகராட்சியின் கீழ் இருக்கும் பள்ளி, கல்லூரி களில் பணியாற்றும் ஆசிரியர் களை நியமனம் செய்ததில் பல் வேறு முறைகேடுகள் நடந்திருப் பது பற்றி விசாரணையில் தெரிய வந்துள்ளது. போதிய கல்வி தகுதியில்லாதவர்களும் ஆசிரி யர்களாக நியமிக்கப்பட்டு இருக் கிறார்கள்.

 தகுதியில்லாத ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளில் நியமனம் செய்த வர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். 

நடப்பு கல்வி ஆண்டில் மாநகராட்சியின் கட்டுப்பாட் டில் இருக்கும் பள்ளி, கல்லூரி களில் படித்த மாணவ, மாணவி களின் தேர்ச்சி 10 சதவீதம் குறைந்துள்ளது. பி.யூ.சி. மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு களின் போதும் இது நிரூபண மாகி இருக்கிறது. இதன் காரண மாக மாநகராட்சியின் பள்ளி, கல்லூரிகளில் தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்க முடிவு செய் யப்பட்டு இருக்கிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். சுமார் 180 ஆசிரியர்கள் தகுதியில்லாமல் பணியாற்றி வருவது தெரிய வந் துள்ளது. அவர்களை நீக்கு வதற்கு முடிவு செய்துள்ளோம். 

சில அதிகாரிகளின் கவனக் குறைவு, அலட்சியம் காரணமாக மாணவர்களின் கல்விக்கு தொந் தரவு ஏற்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தை மாநகராட்சி தீவிரமாக எடுத்து, தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்கிவிட்டு, புதிய ஆசிரியர்களை நியமித்து தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 கருநாடகாவில் 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை சட்டமன்ற உறுப் பினர்களை விலைக்கு வாங்கி கவிழ்த்துவிட்டு, பா.ஜ.க. ஆட்சி எடியூரப்பா தலைமையில் அமைந்தது. ஊழலில் புகழ் பெற்ற அந்த ஆட்சியில் தொடர்ச்சியாக முதலமைச் சராக பசவராஜ் பொம்மையும் திகழ்ந்தார். 

இவர்கள் இருவரது ஆட்சி காலத்தில் மேற்கு கடற்கரை மாவட்டங்கள், தெற்கு மற்றும் பெங்களூரு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரையும், அவர் கள் பரிந்துரைத்த நபர்களையும் சட்டவிதிமுறைகளை மீறி தொடர்ந்து பணிநியமனம் செய்துவந்தனர்.

 இது தொடர்பாக காங்கிரஸ் போராட்டம் நடத்தி இருந்தது. தகுதி இல்லாத நபர்களால் கருநாடகாவில் தொடர்ந்து தேர்ச்சி விகிதம் குறையத் துவங்கியது. ஆனால் பொம்மை அரசு அது குறித்து கவலைப் படாமல் அரசு பள்ளிகளிலேயே ஒப்பந்த அடிப்படையில் பெரு மளவில் ஹிந்து அமைப் பைச்சேர்ந்தவர்களை ஆசிரியர் களாக நியமித்துக்கொண்டே வந்தது. 

இதில் பல்வேறு முறைகேடு கள் நடந்ததாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின. இந்த நிலையில் அங்கு ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது, முதலில் பெங்க ளூரு மாநகராட்சியில் முறை கேடாக நியமிக்கப்பட்ட நபர் கள் மீதும், அவர்களை நியமனம் செய்த அதிகாரிகள் மீதும் நட வடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. 

அடுத்து மாநிலம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறையால் முறைகேடாக பதவி நியமனம் செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். நபர் கள் மீது சித்தராமைய்யா அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

No comments:

Post a Comment