மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குன்னத்தூர் கிளை அலுவலகமான தோழர் கே.தங்கவேல் நினைவக திறப்பு விழா 18.6.2023 அன்று கருங்கல்மேடு பகுதியில், குன்னத்தூர் நகரச் செயலா ளர் பா.சின்னசாமி தலைமையில் நடை பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசு கையில்,
இங்கு திறக்கப்பட்டுள்ள அலுவல கத்தை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அலுவலகத்தை மக்கள் பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு இரவு பாட சாலையாகவும் செயல்படுத்த வேண்டும். இன்று திருப்பூரில் நிலவக்கூடிய வேலையின்மைக்கு மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் தான் காரணம். தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் திருப்பூர் தொழிற்சாலைகள், இப்போது நலிவை சந்தித்து வருகின்றன. நூல் விலை யேற்றம் தொடர்ந்து இங்கு உள்ள தொழில் முனைவோர்களை பாதித்து வருகிறது. ஆனால், பருத்தியை உற் பத்தி செய்யும் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. மாறாக பருத் தியை கொள்முதல் செய்யும் அம்பானி, அதானி போன்றவர்களுக்கு பெரும் லாபம் போய் சேருகிறது.
நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஒன்றிய அரசு ஒரு நாளைக்கு வழங்கும் 80 பைசாவை ஒரு ரூபாய் ஆக்குங்கள் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரு கின்றனர். இதை ஏற்காத நிதியமைச்சர் மற்றும் மோடி அரசாங்கம் 20 பைசா கூடுதலாக கொடுத்தால் நாட்டின் பொருளாதாரம் என்னாகும்? என்று கேட்கிறார்கள். ஆனால், அதானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கு 11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய் துள்ளார்கள். மேலும், அத்தியாவசிய பொருட்களின் தொடர் விலை ஏற்றம் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது. நமது வரிப்பணத்தில் உரு வாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங் கள் சூறையாடப்படுகிறது. ரயில்கள், விமான நிலையங்கள் என்று பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறார்கள். ஜியோ போன்ற தனியார் நிறுவனங் களுக்காக இந்தியா முழுக்க தொலைதொடர்பை உறுதி செய்த பிஎஸ்என்எல் நிறுவ னத்தை அழித்து வருகிறார்கள். இப்படி பொதுத்துறை நிறுவனங்களையும், நாட் டின் நலன்களையும் கேள்விக்குறியாக் கும் மோடி அரசுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் என்றார்.
இவ்விழாவில், கட்டட குழு செயலாளர் சா.பன்னீர்செல்வம் வர வேற்றார். கட்டட குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் கொடியேற்றி வைத்தார். தோழர் கே.தங்கவேல் நினைவகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத் தார்.
No comments:
Post a Comment