புவனேஸ்வர், ஜூன் 5 ஒடிசாவில் நிகழ்ந்த கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக செய்தியாளர் களை சந்தித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இடையே திடீர் வாக்குவாதம் ஏற் பட்டது. விபத்தில் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை தொடர்பாக இருவரும் காரசாரமாக விவாதித்தனர்.
விபத்து நடந்த ரயிலில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களும் இந்த ரயிலில் அதிகம் பயணித்ததால் அம்மாநில முதலமைச்சர் மம்தா ஒடிசாவுக்கு வருகை தந்து மீட்பு நடவடிக்கைகளை நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். அதே போல, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் மீட்புப் பணிகளை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, மம்தா மாலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "மீட்புப் பணிகள் தொடர் கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-அய் தாண்டலாம்" எனக் கூறி னார். அப்போது குறுக்கிட்ட அஸ் வின் வைஷ்ணவ், "மீட்புப் பணிகள் தான் நிறைவடைந்து விட்டதே" என்றார். இதையடுத்து, மீட்புப் பணிகள் முடிந்த பிறகு பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு என அஸ்வினி வைஷ்ணவிடம் மம்தா கேட்டார். அதற்கு 238 பேர் உயிரிழந்ததாக அஸ்வினி கூறினார். அதற்கு மம்தா, "இது நேற்று (3.6.2023) வந்த எண்ணிக்கை. இன்று எவ்வளவு.. நேற்றைக்கே 238 பேர் உயிரிழந்துவிட்டனர்" எனக் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. கவாச் அமல்படுத்தப் படவில்லை: தொடர்ந்து பேசிய மம்தா, "ரயில்வே துறையை நாம் பிரத்யேகமாக கவனிக்க வேண்டும். இதற்குதான் ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் இருந்தது. ரயில்வே எனக்கு குழந்தையை போல. நான் ரயில்வே அமைச்சராக இருந்தவள் மட்டுமல்லாமல், ரயில்வே குடும் பத்தைச் சேர்ந்தவளும் கூட. ரயில்வே அமைச்சருக்கு ஆலோ சனை வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன். ரயில் விபத்துகளை தடுக்க பயன்படும் 'கவாச்' தொழில் நுட்பம் இன்னும் அமல்படுத்தப் படவில்லை" என்றார்.
No comments:
Post a Comment