பெரியார், மார்க்ஸ், சிங்காரவேலர் கருத்துகளில் பெரும் பற்றுக் கொண் டவரும், தமிழ்நாடு மீனவர் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றியவருமான வழக்குரைஞர் லிங்கன் பாஸ்டின் அவர்கள் நேற்று (09.06.2023) மறைந்த செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
மீனவர் நலனுக்கான தெளிந்த பார்வை உடையவர். கடலோர மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான கோரிக்கையை சமூக நீதிப் பார்வையில் முன்வைத்தும், மீனவர் பிரச் சினைகள் குறித்த தரவுகளுடனும் "மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும்" "பழங்குடி பட்டியலும் மீனவர்களும்", "புயலை கிளப்பும் ஒக்கிப் புயல் விவாதங்கள்" ஆகிய நூல்களை எழுதியவர்.
மீனவர் சமூகத்தின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் வகையில் பெரியார் திடலில் நம்முடன் இணைந்து 'நெய்தல் இலக்கியத் திருவிழா'வை முக்கியமான படைப்பாளிகளை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தியவர். தனிவாழ்க்கையில் கவனம் செலுத்தாமல் பொது வாழ்க்கைக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். நம் மீதும், இயக்கத்தின் மீதும் பற்றுக் கொண்டவர். அவரது மறைவு தமிழ்நாடு மீனவர் நலனில் அக்கறை கொண்ட அனைவருக்கும் பேரதிர்ச்சியாகும்.
சமூகப் பணியில் ஈடுபடுவோர் தங்கள் உடல் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அவருக்கு நம் வீரவணக்கம்! தோழர்களுக்கும், உறவினர்களுக்கும் நம் ஆழ்ந்த இரங்கல்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.6.2023
No comments:
Post a Comment