கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
2.6.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* டில்லி மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்ட விவகாரம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் சந்திப்பு: ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும் என அறிவிப்பு
* தனிமங்களின் வரிசை அட்டவணை, அரசியல் கட்சிகள், ஜனநாயகம் உள்ளிட்டவை குறித்த பாடங்களை 10ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து இந்திய ஒன்றிய அரசின் என்.சி.இ.ஆர்.டி நீக்கியது குறித்து இங்கிலாந்து விஞ்ஞானி ரிச்சர்ட் டாக்கின்ஸ் கடும் எதிர்ப்பு.
* நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் புறக்கணிக்க பட்டதற்கு, அவர் பதவியிலிருந்து விலகி இருக் கலாம் என்கிறார் கட்டுரையாளர் ஆனந்த் சகாய்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இரண்டு பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (கீதிமி) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராடும் மல்யுத்த வீராங்கனை களுக்கு ஆதரவாக விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயிட் குழுவினர் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* கால அட்டவணையின் அத்தியாயங்கள், தேசிய பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்களிப்பு, ஜனநாயகத் திற்கான சவால்கள் மற்றும் இயற்கை வளங்களின் நிலை யான மேலாண்மை ஆகியவை என்.சி.இ.ஆர்.டி. ஆல் 10 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* டில்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு பாஜக எம்.பி.யும், மறைந்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டேவின் மகளுமான பிரீத்தம் முண்டே ஆதரவு.
* கல்வித்துறையை கலந்து ஆலோசிக்காமல் மேற்கு வங்க ஆளுநர் நியமித்த தற்காலிக துணை வேந்தர்கள் தங்கள் பதவிகளை புறக்கணிக்க கல்வி அமைச்சர் வலியுறுத்தல்.
தி இந்து:
* நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள அகண்ட பாரத் சுவரோவியம், புத்தர் பிறந்த இடமான லும்பினியை இந்திய எல்லைக்குள் காட்டுவதைக் கண்டித்து நேபாள நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment