வடசென்னை கழக கலந்துரையாடலில் தீர்மானம்
வடசென்னை, ஜூன் 6- வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம், 4.6.2023 அன்று காலை 10.30 மணியளவில், சென்னை பெரியார் திடல், அன்னை நாகம் மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச் செல்வன் அனைவரையும் வர வேற்று, கூட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறினார்.
கழகப் பணிகள் பற்றி தோழர்கள் உரை
தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ.வெங்க டேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, வடசென்னை மாவட்ட காப்பா ளர் கி.இராமலிங்கம், இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், செய லாளர் சு.அரவிந்தகுமார், மகளிர் பாசறை தலைவர் த.மரகதமணி, அரும்பாக்கம் சா.தாமோதரன், செம்பியம் கழக தலைவர் பா. கோபால கிருட்டிணன், வட சென்னை மாவட்ட துணை அமைப்பாளர் சி.பாசுகர், கொளத் தூர் ச.இராசேந்திரன், அயன்புரம் சு.துரைராசு, பொ.இரவீந்திரன், அண்ணா மாதவன், பா.பார்த்தி பன், எஸ்.கே.தேவன், வ.தமிழ்ச் செல்வன், வ.கலைச்செல்வன், சே. அருள்தாஸ், அ.செந்தமிழ்தாசன் ஆகியோர் கழக செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினர்.
நிறைவாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி கழகப் பணிகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டு நிறைவுரை ஆற்றினார்.
தீர்மானம் நிறைவேற்றம்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
ஈரோடு கழகப் பொதுக் குழு வின் தீர்மானப்படியும், - தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளின் படி யும் - சுயமரியாதை இயக்கம், வைக் கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் போரட்டம், திராவிடர் தொன்மை வரலாறு வெளிப்படுத் திய சர்.ஜான்மார்ஷலின் ஆய்வு - நூற்றாண்டு விழாக்களை - முத் தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவோடு இணைத்து அய்ம் பெரும் விழா என வடசென்னை மாவட்டம் முழுவதும் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டங்களை மிகச் சிறப்பாக நடத்துவதெனத் தீர்மானிக்கப்படுகிறது.
அதன்படி, நிகழ்ச்சி நடை பெறும் பகுதியில் கழகக் கொடி யேற்று விழாவையும் சிறப்பாக நடத்துவதென முடிவெடுக்கப்படு கிறது.
கலந்து கொள்ளும் பேச்சாளர்கள்
ஜூன் மாதத்தில் கழக சொற் பொழிவாளர் தஞ்சை செல்வன், ஜூலை மாதத்தில் திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, ஆகஸ்ட் மாதத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி ஆகியோர் சிறப்புரையாற்றும் வகையில், மாதத்திற்கு 5 வீதம் மொத்தம் 15 தெருமுனைப் பிரச் சாரக் கூட்டங்களை வடசென்னை மாவட்டத்தில் நடத்துவதென்று தோழர்கள் கலந்துரையாடல் மூலம் முடிவானது.
அய்ம்பெரும் விழா நடைபெறும் பகுதிகள்
அதன்படி ஜூன் மாதத்தில் அயன்புரம், வெள்ளாளர் தெரு, எருக்கமாநகர், மூலக்கடை, பட்டா ளம் ஆகிய பகுதிகளில் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட் டது.
புதிய பொறுப்பாளர்களுக்கு தோழர்கள் வாழ்த்து
சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டக் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் அவர்களின் அறிவிப்பின்படி - வடசென்னை மாவட் டத்திற்குத் தலைவராகப் பொறுப் பேற்ற வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளராகப் பொறுப்பேற்ற புரசை சு.அன்புச் செல்வன், வடசென்னை இளைஞ ரணி தலைவர் நா.பார்த்திபன், செயலாளர் சு.அரவிந்தகுமார், மகளிர் பாசறை தலைவர் த.மரக தமணி ஆகியோருக்குத் தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ. கோபால் பயனாடை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடல் கூட்டத் தில் வடசென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவ ராகப் பொறுப்பேற்றுக் கொண்ட வ.தமிழ்ச்செல்வன், துணைச் செயலாளராகப் பொறுப்பேற்ற வ.கலைச்செல்வன், அமைப்பாள ராகப் பொறுப்பேற்ற பா.பார்த் திபன் ஆகியோருக்கு தலைமைக் கழக அமைப்பர் தே.செ.கோபால் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். புதிய பொறுப்பாளர்க ளுக்கு அனைத்துத் தோழர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். நிறைவாக வ.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment