ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து ஆறு தொழிலாளர்கள் நசுங்கி சாவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 8, 2023

ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து ஆறு தொழிலாளர்கள் நசுங்கி சாவு

புவனேஷ்வர் ஜூன் 8 ஒடிசா மாநிலத்தின் ஜஜ்பூர் சாலை பகுதியில் உள்ள ரயில்வே நிலையத்தில் சரக்கு ரயிலின் பெட்டிகள் பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ரயில் என்ஜின் இல்லை. இதற்கிடையே, ஜஜ்பூர் கியோஞ்சர் சாலை பகுதியருகே ரயில்வே பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் சில தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இடி இடிக்கிறது என்ப தற்காக சரக்கு ரயில் பெட்டியருகே சென்று தொழிலாளர்கள் ஒதுங் கினர்.  இந்நிலையில் மழையின்போது காற்று பலமாக வீசியதில் சரக்கு ரயிலின் பெட்டிகள் அவர்கள் மீது உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். 

மீண்டும் மீண்டும் தடம் புரளும் ரயில்

தூங்கும் ரயில்வே அமைச்சரகம்

மேற்கு வங்காள மாநிலம் அசன் சோல் பகுதியில் இருந்து சரக்கு ரயில் ஒன்று அசாமின் காம்ரூப் பெருநகர மாவட்டத்தில் உள்ள திதெலியா நகருக்கு நிலக்கரி ஏற்றி சென்றுக் கொண்டிருந்தது. இந் நிலையில், இந்த ரயில், போகோ நகர் அருகே சிங்ரா பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென தடம் புரண்டது இதில், 20 பெட்டிகள் தடம் புரண்டன. மொத்தம் 60 பெட்டிகள் கொண்ட அந்த சரக்கு ரயிலின் மத்திய பகுதியில் இருந்த பெட்டிகளே தடம் புரண்டு உள்ளன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



No comments:

Post a Comment