கொல்கத்தா, ஜூன் 7 ஒடிசாவின் பால சோரில் ரயில் விபத்தில் உயிரிழந்த வர்களின் உறவினர் களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா அறிவித் துள்ளார். இந்த பயங்கர விபத்தில் கை, கால்களை இழந்தவர் களின் உறவினர்களுக்கும் அரசு வேலை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்து தற்போது மனம் மற்றும் உடல் ரீதியான பாதிப்புக் குள்ளானவர்களுக்கும் தனது அரசாங்கம் பண உதவி அளிக்கும் என்று அவர் கூறினார். விபத்து தொடர்பாக எந்த அரசி யலிலும் ஈடுபட விரும்பவில்லை. காயமடைந்த பய ணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வேன் என்றும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment