மயிலாடுதுறை, ஜூன் 4- மயிலாடு துறை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 3.6.2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட் டத் தலைவர் கடவாசல் குண சேகரன் தலைமையில் நடைபெற்றது. மயிலா டுதுறை நகரத் தலைவர் சீனி.முத்து, ஒன்றியத் தலைவர் ஆர்.டி.வி இளங் கோவன், குத்தாலம் ஒன்றியத் தலைவர் சா.முருகையன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் கி.தள பதிராஜ் அனைவரையும் வர வேற்று கூட்டத்தின் நோக்கத்தினை எடுத்துரைத்தார். பெரியார் பிஞ்சு தமிழினி கடவுள் மறுப்பு கூற மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள்தாஸ் இயக்கப் பாடல் களைப் பாடினார்.
மாவட்ட துணைச் செயலாளர் அரங்க.நகரத்தினம், குத்தாலம் ஒன்றிய செயலாளர் கு.இளமாறன், சீர்காழி ஒன்றிய செயலாளர் ப.செல்வம், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பி. பாண்டியன் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரங்கன், தங்க செல்வராஜ், கொள்ளிடம் தோழர் காமராஜ் பெரியார் பிஞ்சு தமிழ் நிலவன், மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். நகர செயலாளர் பூ.சி.காமராஜ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இரங்கல் தீர்மானம்:
மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் பெரியார் தொண்டர் சீர்காழி எஸ்.எம்.ஜெகதீசன் அவர் களின் மறைவிற்கு மாவட்ட திரா விடர் கழகத்த்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள் கிறது.
ஒடிசா ரயில் விபத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அறிந்து இக்கூட்டம் மிகுந்த வேதனை அடைவதோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள் கிறது.
தீர்மானம் 2 :
ஈரோட்டில் நடைபெற்ற திரா விடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை மாவட்ட அளவில் சிறப்பாக நடைமுறைப்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 3 :
வைக்கம் நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தை 17.6.2023 சனிக்கிழமை மாலை மயிலாடுதுறையில் மாநில துணைப் துணைப் பொதுச் செயலாளர்
சே.மெ.மதிவதனியை அழைத்து சிறப் பாக நடத் துவது எனவும், அதனைத் தொடர்ந்து குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம், செம்பனார் கோயில் பகுதிகளில் பொதுக் கூட்டம் மற்றும் தெருமுனைக் கூட்டங் களை நடத்துவது எனவும் தீர் மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 4:
குத்தாலம் ஒன்றியம் கொக் கூரில் 24.6.23 அன்றும் சீர்காழி ஒன்றியம் கட வாசலில் 8.7.23 அன்றும் பெரியாரியல் பயிற்சி முகாம்களை நடத்துவது எனவும் முடிவெடுக்கப் படுகிறது.
பொதுக்கூட்டங்கள் நடை பெறும் நாட்கள் மற்றும் இடங்கள்:
17.6.23: மயிலாடுதுறை
24.6.23: குத்தாலம்
01.7.23: கொள்ளிடம்
08.7.23: சீர்காழி
15.7.23: செம்பனார்கோவில்
No comments:
Post a Comment