ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 4, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்!

4.6.2023

டெக்கான் கிரானிக்கல், ஹைதராபாத்:

* இந்தியாவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுவதை தவிர்க்க ரயில்வே வடிவமைப்பு ஆராய்ச்சி நிறுவனம் (ஆர்டிஎஸ்ஓ) உருவாக்கிய கவாச்  (கவசம்) எனும் நவீன தானியங்கி பாதுகாப்பு அமைப்பை தமிழ்நாட்டில் இருந்து இயங்கும் கோரமண்டல் உள்ளிட்ட ரயில்களில் பொருத்தப்படவில்லை என்று ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் குற்றச்சாட்டு.

* பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ‘செவ்வாய் தோஷம்’ உள்ளதா? என ஜோசியரிடம் அறிக்கை பெறச் சொல்லி உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற ஆணைக்கு, உச்சநீதிமன்றம் தடை; கண்டனம்

* இரு சித்தாந்தங்களுக்கு இடையே இந்திய அரசியலில் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடு வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக அமெரிக் காவில் வாசிங்டன் நகரில் அமெரிக்கவாழ் இந்தியர்களிடம் ராகுல் பேச்சு

தி இந்து:

* முன்னோர்களை வழிபடும் நீலகிரி பழங்குடியினர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்து, கிறிஸ்தவர் அல்லது முஸ்லீம் என ஏன் அடையாளப்படுத்த வேண்டும் என்று கேட்கின்றனர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மாணவர்களின் படிப்பு சுமையைக் குறைத்தல், முறைப்படுத்துதல்  என்ற பெயரில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் இருந்து சில பகுதிகளை என்.சி.இ.ஆர்.டி. நீக்கியது ஜனநாயக விரோத செயல் என கேரள கல்வி அமைச்சர் சிவன் குட்டி கண்டனம்.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment