கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 1, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1.6.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: 

👉எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பது போல நாம் இருக்கக் கூடாது என்று பல சிந்தனையாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்தியாவில் சிலர் அப்படி உள்ளனர். பிரதமர் மோடியும் அப்படிப்பட்ட ஒருவர்தான் என  கலிபோர்னியா மாநிலம் சாண்டா கிளாரா வில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ராகுல் கிண்டல் பேச்சு.

👉 பார்ப்பனர்களுக்கு தனி நலத் திட்டமாம்? துவக்கி வைத்தார் தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

👉 பன்னிரண்டாம் வகுப்பு முடித்து உயர் கல்வியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின் இடைநிறுத்தம் தமிழ்நாட்டிலும் அதிகம் உள்ளதாக ஒன்றிய அரசின் கல்வித் துறை அறிக்கை.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉மோடி "அதிகார பரிமாற்றத்தின்" சின்னமான 'செங்கோல்' நிறுவி தனக்கு முடி சூட்டிக் கொண்டுள்ளார் என சிவசேனாவின் பத்திரிகையான ‘சாம்னா’ கடும் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் மற்றும் குதிராம் போஸ் போன்ற புரட்சியாளர்களின் உத்வேகத்தில் சாவர்க்கர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக,  சாவர்க்கர் வேடமிட்டு நடிக்கும் நடிகர் ரந்தீப் கூறிய கருத்து கேலிக்குரியது; மலிவான விளம்பரம் என நேதாஜி, குதிராம் உறவினர்கள் காட்டம்.

👉எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க திமுக முழு மூச்சுடன் முயற்சி எடுக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தி இந்து:

👉மணிப்பூரில் மே 3 அன்று வெடித்த வன்முறை இன மோதல்களைத் தூண்டியதில் முதலமைச்சர் என். பிரேன் சிங் மற்றும் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் லீ செம்பா சனா சோபா ஆகியோரின் பங்கு குறித்து விசாரிக்க ஒன்றிய அரசுக்கு மணிப்பூர் பழங்குடியினர் மன்றம், டில்லி (விஜிதிஞி) வேண்டுகோள்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment