போபால், ஜூன் 26 கொல்கத்தாவில் இருந்து ஆன்மிக பயணம் என்ற பெயரில் மத்தியப்பிரதேசம் வந்த பெண்களிடம் உடைமைகள் மற்றும் தங்கநகைகளைத் திருடி கொண்டு ஓடிய சாமியார் கூட்டத்தால் மாற்று ஆடை கூட இல்லாமல் பெண்கள் பரித வித்தனர்.
மேற்குவங்க மாநிலம் ஹவுராவிலிருந்து 15 பெண்கள் குழு ஒன்று ஆன்மிக பயணமாக ஒடிசா, மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டில்லி வழியாக கேதார் நாத் செல்ல புறப்பட்டது, ஒடிசாவில் உள்ள கோவில்களை பார்த்த பிறகு மத்தியப் பிரதேசம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள கில்சிபூர் பாபா பாகேஷ்வர்தாம் மடத் தில் ஓர் இரவு தங்கினர்.
இந்த பாகேஷ்வர் தாம் மடத்தலைவர் தான் ஹிந்து தேசத்திற்காக போராட ஆயு தம் வேண்டுமென்றால் நான் கொடுப்பேன் என்று சர்ச் சைக்குரியவகையில் பேசிய சாமியார் தீரேந்திரா என்ப வரின் மடம் ஆகும். இந்த மடத்தில் தங்கி இருந்த போது, சாமியார்கள் இந்த பெண் களுடன் பேச்சுக் கொடுத்தனர். பின்னர் தீர்த்தமும், பிரசாதமும் கொடுத்து சிறிது நேரத்தில் சாமியார்கள் சென்றுவிட்டனர். பிரசாதம் சாப்பிட்டதும் சில மணி நேரம் போதை நிலையில் இருந்த பெண்கள் தெளிவு பெற்ற பிறகு பார்த்தால் தங்களது உடைமைகள், நகைகள் உள்ளிட்ட அனைத்தும் களவு போயிருப்பது தெரியவந்தது.
அவர்கள் மடத்தில் தங்கி இருந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தனர். ஆனால் யாருமே தெரியாது என்று கூறவே அழுது கொண்டு மடத்தின் நிர்வாகியிடம் கூறினர். மடத் தின் நிர்வாகியோ உடைமைகள் காணாமல் போனால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது. வேண்டுமென்றால் காவல் துறையிடம் சென்று முறையிடுங்கள் என்று கூறிவிட்டனர். இதனை அடுத்து காவல்நிலை யத்தின் முகவரியைப் பெற்றுக் கொண்டு பெண்கள் சென்று புகார் கொடுத்துள்ளனர்.
மடத்தில் இவர்கள் சென்று சேர்ந்ததிலிருந்து மடத்திலேயே பூஜைகள் செய்து சேவை செய்து வருவதாக கூறிய சில சாமியார்களை நம்பியதால் இப்போது மாற்று ஆடை கூட இல்லாமல் திரும்பிச் செல்வதற்கும் வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment