வடசேரியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 7, 2023

வடசேரியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம்

வடசேரி, ஜூன் 7- கடந்த 9.5.2023  திங்கள் மாலை 6.30 மணியளவில் உரத்தநாடு ஒன்றியம் வடசேரி பேருந்து நிலையத்தில்  வைக்கம் போராட்ட விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

வடசேரி கிளை கழகத் தலைவர் த.இராமசாமி   அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்

மாவட்டத் துணைத் தலைவர் முத்து இராஜேந்திரன்  தலைமை வகித்து உரையாற்றினார்

தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி மாவட்ட இணை செயலாளர், தீ.ஞானசிகாமணி ஒன் றிய தலைவர், த.ஜெகநாதன் ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், வட சேரி ஊராட்சி மன்றத் தலைவர் சோம. நந்தகுமார்  ஆகியோர் முன் னிலையேற்று உரையாற்றினர்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவின் சிறப்புகளை எடுத்து ரைத்து மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மே.மதிவதனி சிறப்புரையாற்றி னார் 

நிகழ்ச்சி தொடக்கத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்து கின்ற வகையில் ‘மந்திரமா தந் திரமா?' என்ற நிகழ்ச்சியை தெற்கு பகுதி செயலாளர்  பேராசிரியர் முக் கரை க.சுடர்வேந்தன் நடத்திக் காட்டினார் 

தஞ்சை மாவட்ட கழகத் துணைச் செயலாளர் அ உத்திராபதி பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செய லாளர் நா.ராமகிருஷ்ணன், தஞ்சை மண்டலம் மகளிரணி செயலாளர் கலைச்செல்வி அமர்சிங், ஒன்றிய மகளிரணி செயலாளர் வடசேரி இ.அல்லிராணி, ஒரத்தநாடு ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில்குமார், குக் கரை செல்வராஜ் வடசேரி கிளைக் கழகப் பொறுப்பாளர் ந. குப்புசாமி  வடசேரி மே.இளங்கோவன், வட சேரி என்.பி.சரவணன் வடசேரி பகுத்தறிவாளர்கள் கழக  பொறுப் பாளர் சா.ஆறுமுகம், வடசேரி திரிபுரசுந்தரி அல்லிராணி,  மதுக்கூர் ஒன்றிய மகளிரணி செயலாளர்  உ.சுமித்ரா , மன்னார்குடி மாவட்ட துணைச் செயலாளர் இன்பக்கடல், மன்னார்குடி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வன், கழகப் பேச்சாளர் சிங்காரவேல், மன்னார்குடி சிவ.வணங்காமுடி, பட்டுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் புலவஞ்சி இரா காமராஜ் மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக  செயலாளர் திருமேனி, மதுக் கூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் சிவாஜி, முத்து, துரைராஜ், அண்ணா துரை, ஒரத்தநாடு ஒன்றிய துணைச் செயலாளர் தெலுங்கன்குடிக்காடு, நா.பிரபு, நல்லிக்கோட்டை நல்ல தம்பி, தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர் கருவிழிகாடு ரெ.சுப்பிர மணியன், நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் தங்க.பிச்சைக்கண்ணு, கரு வாக்குறிச்சி கோபால், வன்னிப்பட்டு  செந்தில்குமார்,  சமயன்குடிகாடு  க.அறிவரசு  உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

வடசேரி கிளைக் கழக செய லாளர் அ.சந்திரசேகரன் அனை வருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment