சென்னை ஜூன் 8 - கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட் டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். 'கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும்,
5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்' என, சட்டசபையில் அமைச்சர் வேலு அறிவித்தார்.
அதன்படி, சென்னை கிண்டி யில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், மகிழம் மரக்கன்று நட்டு, 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுதும் நேற்று, நெடுஞ்சாலை துறையின், 340 சாலைகளில், மகிழம், வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகைகளைச் சேர்ந்த, 46 ஆயிரத்து, 410 மரக்கன்றுகள் நடப் பட்டன. இவை, 24 மாத கால வளர்ச்சி உடையவை.
பருவமழைக்கு முன், அய்ந்து லட் சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப் பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, வேலு, சுப்ரமணியன், நெடுஞ்சாலைகள் துறை செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம் பாட்டு திட்ட இயக்குனர் அண்ணா துரை மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment