சென்னை, ஜூன் 30 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.70,000 கடனுதவியை ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் வழங்கும் திட்டத்தை முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் (28.6.2023) அன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரகப் பகுதியில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகரப் பகுதிகளில் விற்பனை செய்ய ஏதுவாக ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட அளவிலான முதன்மை விற்பனை வளாகமும், தேவையின் அடிப்படையில் கூடுதல் வணிக வளாகங்களும் பொன் விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட் டத்தின் கீழ் கட்டப்பட்டன. கலைஞர் இவ்வணிக வளாகங்களுக்கு “பூமாலை வணிக வளாகம்” எனப் பெயர் சூட்டி திறந்து வைத்தார்.
அரியலூர், திருப்பூர் மற்றும் புதிய மாவட்டங்கள் நீங்கலாக 29 மாவட்டங் களில் பூமாலை வணிக வளாகங்கள் செயல்பட்டு வந்தன மற்றவை பழுத டைந்துள்ளது. இவற்றில் 26 மாவட்ட அளவிலான பூமாலை வணிக வளாகங் களை புனரமைத்து, பழுதுநீக்கம் செய்து, ஒரே மாதிரியான வண்ணம் பூசிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, 26 மாவட்ட பூமாலை வணிக வளாகங்கள் 5 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக் கப்பட்டது. இதனை தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்டம் எனப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சென்னை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கன்னியாகுமரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் நீங்கலாக 31 மாவட்டங்களில் 120 வட்டாரங்களில் உள்ள 3,994 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2023_20-24ஆம் ஆண் டிற்கான வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் மானியக் கோரிக்கையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வாழ்ந்து கட்டுவோம் திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டில் மகளிர் புதிதாக தொழில் தொடங்குவதற்கும், ஏற்கெ னவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்துவற்கும் 1000 கிராமங்களில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் “நுண் தொழில் நிறுவனங் களுக்கான நிதி திட்டம்” ரூ.50 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்” என்று அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க, இத்திட்டத்தின் தொடக்க நிகழ்வாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று 10 மாவட்டங்களைச் சார்ந்த 10 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் களுக்கு மொத்தம் 5.60 லட்சம் ரூபாய் கடனுதவியாக வழங்கினார். இந்த நிதியாண்டிற்குள் 50 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இத்திட்டத்தின் பயனாளர்கள், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்பட்டுவரும் வட்டாரங் களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களாகவும், குறைந்தபட்சம் 30 சதவித பயனாளிகள் மாற்றுத் திறனாளிகளாகவும், நலிவுற்றோராக வும் இருப்பர். இவர்களின் தொழில் திட்டங்களின் அடிப்படையில் 70,000 ரூபாய் வரை இத்திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகிறவருக்கு கடனுதவி வழங்கப்படும்.
மேலும் தொழில் முனைவோர் தங்களுக்கு தேவையான தொழில் மேம்பாட்டு சேவைகளை மதி சிறகுகள் தொழில் மய்யத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment