சென்னை, ஜூன் 4-_- விவசாயிகளின் தேவைகளை உணர்ந்து சந்தையின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்பத் தயாரிப்புகளைத் தொடர்ந்து அளித்து வருவதோடு, தர மான பண்ணை உற்பத்தி கருவிகளை உற்பத்தி செய்துவரும் சோனாலிகா நிறுவனத்தின் பிரத்தேயக அணுகு முறை, ஒட்டு மொத்தமாக வேளாண் அணுகு முறையின் காரணமாக நிறுவ னம் 2023 மே மாதத்தில் அதிகபட்சமாக 13,702 டிராக்டர்களை விற்பனை செய் துள்ளது.
இது ஒட்டு மொத்தமாக மே 2023இல் எட்டப்பட்ட உள்நாட்டு விற்பனை வளர்ச்சி 11.42%. டிராக் டர்ஸ் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி கணிப்பான 2.7 சதவீத அளவைக் காட்டிலும் 4 மடங்கு அதிகமாகும். இதன் மூலம் மே 2022இல் விற்பனை செய்த 12,615 டிராக்டர்கள் என்ற முந்தைய சாதனை அளவையும் இந்நிறுவனம் விஞ்சியுள்ளது.
இது குறித்து இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிமிடெட் நிறுவ னத்தின் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் கூறுகையில்:
புதிய கருவிகளை அளிப்பதில் எங்கள் நிறுவனத்தின் தொடர்ச்சி யான பங்களிப்பு காரணமாக விவசாயிகள் சுய சார்புடையவர்களாக உயர்வதோடு வளர்ச்சியையும் எட்டு வர். விவசாயிகள் உற்பத்தியை அதிக ரிக்கச் செய்வதோடு அதிக லாபம் ஈட்டி புதிய உயரத்தை எட்டுவதற்குத் தேவை யான அனைத்து உதவிகளையும் இந்நிறுவனம் செய்யும்" என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment